சென்னைவாசிகளுக்கு உதவும் நள்ளிரவு உணவகங்கள்!

சென்னை:

சென்னை போன்ற பெருநகரங்களில் நள்ளிரவு பார்ட்டிகள் நடைபெறுவது வாடிக்கையான ஒன்று. அதுவும் வார இறுதிநாள் என்றாலே ‘வீக்என்ட்’ பார்ட்டிதான் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு சென்னை வாழ் ஹைடெக் மக்களின் வாழ்க்கையில்  இரவு நேர பார்ட்டியும் இன்றியமையாததாகி வருகிறது.

அதற்கு தகுந்தாற்போல், சென்னை மக்களின் பசி தீர்க்க,  நகரம் முழுவதும் ஆங்காங்கே நள்ளிரவு உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு உணவகமும் ஒவ்வொரு வகையான உணவுகளுக்கு பிரசித்தம் பெற்றவை.

அதுபற்றிய விவரம் உங்களுக்காக….

மத்ஷ்யா (Mathsya)

இந்த உணவகத்தில் சுவையான தென்னிந்திய உணவு வகைகள் நாள் முழுவதும் கிடைக்கும்.

இடம்: ஹால்ஸ்ரோடு, எக்மோர்,

நேரம்: அதிகாலை 2 மணி வரை திறந்திருக்கும்

சர்வீஸ்: சாப்பிடும் வசதி உள்ளது. ஹோம் டெலிவரியும் செய்யப்படும்.

ரூ.500 இருந்தால் இரண்டுபேர் உணவருந்தலாம்.

mathsya-zomato

டெல்லி ஹைவே (Delhi Hightway)

எக்மோர் பகுதியில் உள்ள மற்றொரு சுவைமிகுந்த உணவகம் டெல்லி ஹைவே. இங்கு சைவ உணவுகள், குறிப்பாக வடஇந்தியர்களான ஜெயின் சமுகத்தினருக்கு பிடித்தமான உணவு வகைகள் இங்கு பிரபலம்.

இடம்: காசாமேஜர் ரோடு, எக்மோர் சென்னை.

நேரம்: அதிகாலை 3 மணி வரை திறந்திருக்கும்.

சர்வீஸ்: சாப்பிடும் வசதி உள்ளது. ஹோம் டெலிவரியும் செய்யப்படும்.

ரூ.750 இருந்தால்இரண்டுபேர் உணவருந்தலாம்.

இதன் மற்றொரு கிளை காதர் நவாஸ்கான் ரோட்டில் உள்ளது. (இது இரவு 10.30 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்)

delhi-highway

டான்&டஸ்க் (Dawn & Dusk)

நாவிற்கு சுவையான நான்வெஜ் உணவகம் இதுவாகும். இரவு நேர இனிமையை சுவையாக அனுபவிக்க ஏதுவான சுவையான உணவு வகைகள் கிடைக்கும்.

இடம்: காதர் நவாஷ் கான் ரோடு, நுங்கம்பாக்கம்

நேரம்: காலை 7 மணி வரை

சர்வீஸ்: ஹோம் டெலிவரி மட்டும்.

ரூ.450 இரண்டு பேர் உணவுக்கு

dawn-dusk-zomato

நான்கிங் (Nanking)

நான் வெஜ் உணவகமான நான்கிங் சைனீஸ் வகையான உணவுகளுக்கு பெயர்போனது. ஆர்டர் செய்துவிட்டு மெரினாவில் இரவு உலாவிக்கொண்டிருந்தால், உங்கள் இடம் தேடி வரும் உணவு.

இடம்: 93, பீட்டர்ஸ் ரோடு, ராயபேட்டை, சென்னை

நேரம்: காலை 5 மணிவரை

சர்வஸ்: ஹோம் டெலிவரி மட்டும்

இருவர் சாப்பிட குறைந்தபட்சம் ரூ.500 செலவாகும்.

nanking

ராசாவிட் (Rasavid)

சுவையான பிரியாணிக்கு பெயர்போனது ராசாவிட். விருப்பப்படும் பிரியாணி வகைகள் மற்றும் கபாப்கள் கிடைக்கும்.

இடம்: ஓஎம்ஆர் ரோடு, காரப்பாக்கம் அரவிந்த் தியேட்டர் எதிரே

நேரம்: காலை 5 மணி வரை

சர்வீஸ்: அங்கேயே சாப்பிடலாம், ஹோம் டெலிவரியும் உண்டு.

இரண்டுபேர் சாப்பிட குறைந்தது ரூ.550 தேவை.

(இதன் கிளை செம்மஞ்சேரியிலும் உள்ளது)

rasavid

புதிய ஆந்திரா உணவகம் (New Andhra meals)

ஆந்திர வகை உணவுகளுக்கு பேர்போன உணவகம்.

ஆந்திரா உணவின் சுவையை ஸ்பைசி உணவுகள் கிடைக்குமிடம்.

இடம்: ஆற்காடுரோடு, வளசரவாக்கம்

நேரம்: அதிகாலை 2 மணி வரை

சர்வீஸ்: அங்கேயே சாப்பிடலாம், ஹோம் டெலிவரியும் உண்டு.

குறைந்தபட்சம் ரூ.450  இரண்டு பேர் சாப்பிட செலவாகும்.

(இதன் கிளை உணவகம் சென்னை தி.நகரிலும் உள்ளது)

new-andhra-meals

புட்அவுட் (Food Out)

திருவான்மியூர் பகுதிவாசிகளுக்கு பிரபலமான உணவகம் புட்அவுட்.

இடம்: எல்.பி.ரோடு, திருவான்மியூர்.

நேரம்: காலை 6 மணி வரை

சர்வீஸ்: ஹோம் டெலிவரி மட்டும்

இருவர் சாப்பிட குறைந்தபட்ச பணம் ரூ.450 தேவை

food-out

ரூக்கிஸ் (Rookyz)

சுவையான நான்வெஜ் உணவுகளுக்கு தரமான உணவகம் ரூக்கிஸ். உங்களது நள்ளிரவு உணவு தேவைகளை சுவையாக தயாரித்து வழங்கி வருகிறது.

இடம்: இந்திராநகர் காம்ப்ளக்ஸ், 3வது அவென்யூ, அடையார்.

நேரம்: காலை 5 மணி வரை.

சர்வீஸ்: உணவகத்திலேயே சாப்பிடலாம். ஹோம் டெலிவரியும் உண்டு.

குறைந்த பட்சம் இருவர் சாப்பிட ரூ.500 தேவை.

mehul-patel-rookyz

டிவிலைட் டேக்அவே (Twilight Takeaway)

இரவு பார்ட்டி முடித்து வருபவர்களுக்கு நம்பிக்கையான உணவகம். அனைத்துவகையான சைனீஸ், கான்டிநென்டல், இந்தியன் வகையான உணவுகளுக்கு பிரசித்தி பெற்ற உணவகம்.

இடம்: பார்க் சைடு தெரு, லேக் ஏரியா, நுங்கம்பாக்கம்

நேரம்: காலை 6 மணி வரை

சர்வீஸ்: ஹோம் டெலிவரி மட்டும்

குறைந்த பட்சம் இருவர் சாப்பிட ரூ-.450 செலவாகும்.

twilight-takeaway

சீ எம்பெரர் கிரிலெர்ஸ் (Sea Emperor Grillerz)

தற்போது இரவில் நீங்கள் விரும்பும் அற்புதமான மத்திய கிழக்கு நாடுகளின் சுவையான உணவு வகைகள்.

இடம்: 200அடி லிங்க் ரோடு, டோல்கேட் அருகில், துரைப்பாக்கம்.

நேரம்: அதிகாலை 4 மணி வரை

சர்வீஸ்:ஹோம் டெலிவரி மட்டும்

இருவர் சாப்பிட குறைந்தது ரூ.600 ஆகும்

jazim-jafar-sea-emperor

திண்டுக்கல் தலப்பாக்கட்டி (Dindigul Thalappakatti)

பிரியாணி என்றால் திண்டுக்கல் தலப்பாக்கட்டிதான் நினைவுக்கு வரும். நாவில் சுவை ஊறும் பிரியாணி ரசிகர்களுக்கு ஏற்றார்போல் மக்கள் நடமாட்டம் மிகுந்த திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது.

இடம்: வர்னா டவர்ஸ், அண்ணாசாலை, பார்டர் தோட்டம், திருவல்லிக்கேணி.

நேரம்: அதிகாலை 3 மணி வரை

சர்வீஸ்: உணவகத்திலேயே சாப்பிடலாம். ஹோம் டெலிவரியும் உண்டு.

இருவர் சாப்பிட குறைந்தபட்சம் ரூ.650 தேவை.

kritaj-ashok-dindigul

மிட்நைட் எக்ஸ்பிரஸ் (Midnight Express)

பழமையான அசைவ உணவகம் மிட்நைட் எக்ஸ்பிரஸ். இதற்கென வாடிக்கையாளர்கள் பலர் உள்ளனர்.

இடம்: டிடிகே ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை

நேரம்: அதிகாலை 1 மணி வரை

சர்வீஸ்: உணவகத்திலேயே சாப்பிடலாம். ஹோம் டெலிவரியும் உண்டு.

குறைந்த பட்ச தொகை ரூ.400 இருந்தால் இருவர் உணவருந்தலாம்.

midnight

புகாரி ஹோட்டல் (Buhari Hotel)

சென்னையின் பிரசித்தி பெற்ற பழமையான அசைவ உணவகங்களில் ஒன்று புகாரி ஓட்டல். இங்கு தயார் செய்யப்படும் சிக்கன்65-க்கு ஈடு இணை வேறெங்கும் இருப்பதாக தெரியவில்லை.  அசைவ உணவு வகை களுக்கு பெயர்பெற்றது.

இடம்: அண்ணாசாலை (மசூதி எதிரே)

நேரம்: அதிகாலை 2 மணி வரை

சர்வீஸ்: உணவகத்திலேயே உணவருந்தலாம். ஹோம் டெலிவரியும் உண்டு.

இருவர் நன்றாக சாப்பிட குறைந்தபட்சம் ரூ.850 தேவைப்படும்.

asif-bon-viveur-buhari

பூடி கால் (Foody Call)

நவீன காலத்திற்கேற்ப சுவையான, வித்தியாசமான உணவு வகைகளை வழங்கி வருகிறது. சிட்டியில் வேறெங்கும் கிடைக்காத உணவு வகைகள் இங்கும் கிடைகும்.

இடம்: ரட்லண்ட் கேட், 2வது தெரு, நுங்கம்பாக்கம்.

நேரம்: அதிகாலை 5 மணி வரை

சர்வீஸ்: ஹோம் டெலிவரி

இருவர் சாப்பிட ரூ.550 தேவைப்படும்

foody-call

ஷாக் (Shaack)

சுவையான உணவகங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள உணவு வகைகள் சற்று விலை அதிகமாக இருந்தாலும், அதற்கான மதிப்பு அதன் சுவைகளில் தெரியும்.

இடம்: கே.ஜி.கேலக்ஸி, 2வது அவென்யூ, அண்ணாநகர் கிழக்கு

நேரம்: அதிகாலை 4மணி வரை

சர்வீஸ்: அங்கேயே சாப்பிடலாம். ஹோம் டெலிவரியும் உண்டு.

குறைந்த பட்சம் ரூ.1000 இருந்தால் இருவர் சாப்பிடலாம்.

ashish-yohan-shaack

மிட்நைட் மசாலா (Midnight Masala)

சுவையான வடஇந்திய மற்றும் தென்னிந்திய உணவு வகைகள் கிடைக்கும்.

இடம்: சுந்தரம் பில்டிங், ஆற்காடுரோடு, கோடம்பாக்கம்

நேரம்:  பகல் 11 மணி முதல் அதிகாலை 2 மணி வரை

சர்வீஸ்: அங்கேயே சாப்பிடலாம். ஹோம் டெலிவரியும் உண்டு.

இருவர் சாப்பிட குறைந்தது ரூ.1000 தேவைப்படும்.

midnight

வாசகர்களே  சுவைத்து பாருங்கள்… ருசித்து பாருங்கள்….