ameer
‘பெங்களூர் நாட்கள்’ படத்திற்கு பிறகு ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கடம்பன்’. ‘மஞ்சப்பை’ புகழ் ராகவன் இதனை இயக்கி வருகிறார். தற்போது, ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் ஆர்யா.
‘பருத்திவீரன்’ புகழ் அமீர் இப்படத்தை இயக்கவுள்ளார். இதற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். அமீரின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் தான். ஆனால், இதில் அமீர்-யுவன் ஹிட் காம்போ இல்லையாம். இந்த முறை இசையமைப்பாளர் ஜிப்ரானுடன் கூட்டணி அமைக்கிறார். வெகு விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென  எதிர்பார்க்கப்படுகிறது.