சென்னை

மிழகத்தில் கோரோனா குறித்த தற்போதைய விவரங்கள் பின் வருமாறு :

தமிழ்கத்தில் இன்று மட்டும் டில்லி நிகழ்வுக்கு சென்று வந்த 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த் 110 நபர்களில், நெல்லை 6, கோவை 28, ஈரோடு 2, தேனி 20, திண்டுக்கல் 17, மதுரை 9, திருப்பத்தூர் 7, செங்கல்பட்டு 7, சிவகங்கை 5, தூத்துக்குடி திருவாரூர், காஞ்சிபுரத்தில் தலா 2, கரூர், சென்னை, திருவண்ணாமலையில் தலா ஒருவர் அடங்குவர்.

இது குறித்த மேலும் விவரங்கள் :

தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இவர் டில்லி நிஜாமுதின் பகுதியில் நடந்த மத நிகழ்வில் கலந்துக் கொண்டவர் ஆவார்.  இந்த தகவலைத் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்துள்ளார்.

டில்லியில் நிஜாமுதின் மசூதியில் நடந்த மத நிகழ்வில் கலந்துக் கொண்டு திரும்பியவர்களில் மேலும் ஒருவர் கொரோனா அச்சம் காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இவர் விக்கிரவாண்டி பேரூராட்சியை சேர்ந்தவர் என்பதால் அந்த பகுதிக்கு  வெளியாட்கள் யாரும் நுழையாமல் இருக்க காவல்துறை சீல் வைத்துள்ளது.

திருச்சியில் இருந்து டில்லி சென்று திரும்பிய 28 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் என 88 பேர் திருச்சி மருத்துவனமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கு கொரோனா வார்டில்  சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நிஜாமுதின் நிகழ்வில் கலந்துக் கொண்ட தமிழ்கத்தை சேர்ந்த 500 பேர் தங்களைப் பற்றி தாங்களே முன் வந்து விவர்ம் அளித்துள்ளனர்.  இந்த தகவல்களை அளித்த தமிழ்க சுகதார செயலர் பீலா ராஜேஷ் அவர்களுக்கு ந்ன்றி தெரிவித்துள்ளார்.  இவர்கல் நல்ல வேளையாக கடந்த 8 நாட்களாக வீட்டிலேயே இருந்துள்ளதாக அவர் கூறி உள்ளார்.