கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்க உதவும் செயலியை வெளியிட்டார் லதா ரஜினிகாந்த்!

கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்க உதவும் செயலியை லதா ரஜினிகாந்த் அறிமுகம் செய்தார். ரஜினி காந்த் பிறந்த நாளை ஒட்டி குழந்தைகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பின் அப்ளிகேஷன் வெளியிட்டப்பட்டது.

latha

நடிகர் ரஜினி காந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் தயா பவுண்டேஷன் மூலம் சமூக நல பணிகளை செய்து வருகிறார். அதன் ஒருபகுதியாக ஆதரவற்ற மற்றும் கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கும் வகையில் ‘பீஸ் ஃபார் சில்ட்ரன்’ என்ற அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பின் விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினி தனது மனைவியின் சமூக நல பணிகள் குறித்து பெருமிதத்துடன் பேசினார்.

இந்நிலையில் பீஸ் ஃபார் சில்ட்ரன் அமைப்பின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பிற்கான அப்ளிக்கேஷன் ஒன்று உருவாக்கப்பட்டது. ரஜினியின் பிறந்த நாளை ஒட்டி இந்த அப்ளிக்கேஷனை லதா ரஜினி காந்த் வெளியிட்டார். தயா அறக்கட்டளை சார்பாகவும், அனைத்து குழந்தைகளின் சார்பாகவும் ரஜினி காந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்த கொண்ட லதா ரஜினி காந்த், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட அப்ளிகேஷனை வெளியிட்டு, அதன் கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணையும் வெளியிட்டார்.