ஓ.பி.எஸ்ஸை ஆதரித்தார் நடிகை லதா! சரோஜா தேவியை இழுக்க சசிகலா தரப்பு மும்முரம்!

சென்னை:

மிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆரின் ஜோடியாக பல படங்களில் நடித்தவருமான நடிகை லதா, ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு ஆதரவு அளித்துள்ளார்.

ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவு அளித்த லதா

அ.தி.மு.க.வில் .பிளவு ஏற்பட்டு சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியுமாக இயங்கி வருகிறது.

இந்த நிலையில், தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆரின் ஜோடியாக பல படங்களில் நடித்தவருமான நடிகை லதா, ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு ஆதரவு அளித்துள்ளார்.

இது குறித்து, “ஓ.பன்னீர்செல்வம் பக்கம்தான் உண்மையான அ.தி.மு.க. இருக்கிறது.  எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் கனவுகளை ஓ.பன்னீர்செல்வம்தான் நிறைவேற்றுவார். அவரது தலைமையில் விரைவில் தமிழகத்தில் ஆட்சி மலரும்” என்று லதா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, எம்.ஜி.ஆருக்கு திரைப்படங்களில் ஜோடியாக பல படங்களில் நடித்த இன்னொரு முன்னாள் நடிகையான சரோஜாதேவியை தங்கள் வசம் இழுக்க சசிகலா தரப்பு பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.