காபுல்:

ஆப்கானிஸ்தான் ஹேரட் நகரில் இருந்து டில்லிக்கு நேரடி விமானச் சேவை இன்று தொடங்கியது.

கிரேக்க மாமன்னர் அலெக்சாண்டர் காலத்தில் மத்திய ஆசியாவின் உணவுக் களஞ்சியமாக ஆரியா என்ற பகுதி இருந்தது. தற்போது இந்த பகுதி ஆப்கானிஸ்தானில் ஹேரட் மாகாணமாக உள்ளது.

இதன் தலைநகரான ஹேரட்டுக்கு டில்லியில் இருந்து நேரடி விமானச் சேவை இன்று தொடங்கியது. ஹேரட்டில் முதல் விமானத்தை ஆப்கானிஸ்தான் துணை ஜனாதிபதி சர்வார் டானேஷ், ஹேரட் கவர்னர் ஆசிப் ரஹிமி, இந்திய தலைமை தூதர் குமார் கவுரவ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.