இந்தியா-பிரிட்டன் கலாச்சார ஆண்டு தொடக்க விழா கோலாகலம்

லண்டன்:

இந்தியா-பிரிட்டன் கலாச்சார ஆண்டை தொடங்கும் வகையில் லண்டன் பக்கிங்காம் அரண்மனை இன்று கோலாகல விழாவுக்கு தயாராகி வருகிறது.

2017ம்ஆண்டை இந்தியா-பிரிட்டன் கலாச்சார ஆண்டாக கடந்த 2015ம் ஆண்டில் பிரதமர் மோடி அந்நாட்டுக்கு சென்ற போது அறிவிக்கப்பட்டது. கலாச்சார உறவுகளை கொண்டாடும் வகையிலும், இந்தியாவின் 70வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் இந்தாண்டு முழுவதும் இந்தியாவிலும், பிரிட்டனிலும் நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தி கொண்டாட அப்போது தீர்மானிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் லண்டன் பக்கிங்காம் அரண்மனை தயாராகிவிட்டது. இரண்டாம் மகாராணி எலிசபெத் இந்த கொண்டாட்டத்தை இன்று தொடங்கி வைக்கவுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் ஆஸ்கார் புகழ் ‘ஜெய் ஹோ’ பாடலை பிரிட்டன் ராணுவ க்ரெனாடியர் வீரர்களின் பேண்டு குழுவினர் இசை முழக்கத்துடன் தொடக்க விழா நடக்கிறது.

இன்று நடக்கும் தொடக்க விழாவில் 90 வயதாகும் ராணி, அவரது கணவர் டியூக் ஆப் எடின்பர்க் இளவரசு பிலிப், பேரன் இளவரசர் வில்லியம், இவரது மனைவி கேட் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சி ஆங்கிலேயர் மற்றும் இந்திய கலாச்சாரத்தை எடுத்துக் கூறுகையில் இரு நாட்டு முக்கிய பிரமுகர் மத்தியில் நடக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி மற்றும் கலை, அழகு, உணவு, இலக்கியம், விளையாட்டு துறை சிறப்பு விருந்தினர்கள், நடிகர்கள் குன்னல் நாயர், நேகா கபூர், ஆயிஷா தகர்கர், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ், ரியோ பெர்டினாந்த், சிதார் மேஸ்ட்ரோ அனுஷ்கா சங்கர் ஆகியோர் கலந்துகெ £ள்கின்றனர்.

வடிவமைப்பாளர்கள், கலாச்சார தூதர்கள் உள்பட 200 சிறப்பு விருந்தினர்கள் கலந்தகொள்கின்றனர். மேலும் ஒரு சிறப்பம்சமாக லண்டனில் உள்ள பழமை வாய்ந்த இந்திய உணவக தலைமை சமையலர் வீராசாமி தலைமையில் தலைசிறந்த சமையல் கலை வல்லுனர்கள் இந்திய வகை உணவு விருந்தை தயார் செய்துள்ளனர்.

ராயல் நூலகத்தில் உள்ள மன்னர் குடும்பத்தின் இந்திய வருகை, இந்திய பரிசு பொருட்கள் இடம்பெறும் கண்காட்சி நடைபெறுகிறது. லண்டலில் உள்ள இந்திய தூதர்கள் மற்றும் ஆங்கிலேய அரசு இதற்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறது. இது வெறும் அதிசய விழாவாக மட்டுமில்லாமல் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கு இடையே அர்த்தமுள்ள உறவுகளை மேம்படுத்தும் வகையில் இருக்கும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி