புதுமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் நடிகர் அதர்வா நடிக்கவுள்ள புதிய படத்தில் நாயகியாக நடிகை லாவண்யா திரிபாதி ஒப்பந்தமாகியுள்ளார்.

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய, கலை படத்தொகுப்பு செய்கிறார்.

இப்படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர் நடிகைகள், படப்பிடிப்பு குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.