நாங்குனேரி:

ந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக நாங்குனேரி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல் வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதன் காரணமாக, இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. அங்கு இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசியவர், , நாங்குநேரி தொகுதியில் நடைபெற உள்ள இடைத் தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல் என்றார். வாக்களித்த மக்களை நினைக்காமல், மக்களுக்கு நன்மை களை செய்ய எண்ணாமல், பதவிக்கு ஆசைபட்டு மக்களுக்கு துரோகம் செய்ததால் இடைத் தேர்தலை சந்திக்கும் நிலை வந்துள்ளது என்று முன்னாள் எம்எல்ஏவும், தற்போதைய எம்.பி.யுமான வசந்தகுமாரை சாடினார்.

தொடர்ந்து பேசியவர்,  யாருக்கு வாக்களித்தால் நன்மை என்பதை உணர்ந்து மக்கள் வாக்களிக்கவேண்டும் என்ற முதலமைச்சர், ஆளும் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால் மக்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என்றவர்,  எதிர்கட்சிகள் வெற்றி பெற்றால் மக்களுக்கு பலன் கிடைக்காது என்றவர், அவர்கள் அரசை அணுகி மக்கள் நலப்பணிகள் மேற்கொள்ள மாட்டார்கள் என்றும் கூறினார்.

இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை பேணிகாப்பதில் முதல் மாநிலமாக தமிழகம் இருப்பதாக அவர் குறிப்பிட்டவர், இதற்காக குடியரசு துணை தலைவர் கையால் தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.  திமுக ஆட்சி காலத்தில் இருந்த இடைவிடாத மின் வெட்டில் இருந்து தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றியது அதிமுக அரசு தான் .

இவ்வாறு முதல்வர் கூறினார்.