உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை….அகிலேஷ் யாதவ்

லக்னோ:

உத்தரப்பிரதேசத்தில் மாபியா கும்பல் தலைவன் முன்னா பஜ்ரங்கி ஜான்சி சிறையில் ஒரு கைதியால் சுட்டுக் கொல்லப்பட்டான். இது குறித்து அம்மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘மாநிலத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு என்பதே இல்லை. சிறையில் அடைத்தாலும் எதிரியை கொல்ல முடியும் என குற்றவாளிகள் நம்பிக்கையுடன் உள்ளனர். மாநிலம் முழுவதும் ஒருவித பீதி நிலவுகிறது. இது போல் ஒரு மோசமான ஆட்சியையும், குழப்பத்தையும் இம்மாநிலம் மக்கள் இதுவரை கண்டதில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.