மே 31 முதல் சட்டக்கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

சென்னை :

நாளை மறுதினம் (மே31) முதல் சட்டக்கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

சட்டக்கல்லூரியில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு வரும் 31ந்தேதி (நாளை மறுதினம்) முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்படும் சென்று சென்னை அம்பேத்கர் சட்டபல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

ஐந்து ஆண்டு சட்டப்படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மே31 முதல் ஜூன் 19 வரையில் வழங்கப்படும் என்றும் மூன்று ஆண்டு சட்டப்படிப்புகளில் சேர மே31ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் விவரங்களை  கீழே உள்ள வளைதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

http://tndalu.ac.in/admission17-18/admNotification17-18LawColleges.pdf