ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு சட்ட ஆணையம் பரிந்துரை

டில்லி:

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையை மத்திய பா.ஜ.க அரசு அறிவித்தது. இதனால் தேர்தல் செலவுகள் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்னை. தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், லோக்சபா மற்றும் சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறை மக்களின் வரிப்பணம் மிச்சமாகும்.

ஜம்மு காஷ்மீரை தவிர அனைத்து மாநிலங்களிலும் இவ்வாறு தேர்தல்களை நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது. அரசியல் சாசனப் பிரிவு 172-ஐ திருத்தம் செய்யாமல் இது சாத்தியமில்லை என்று சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.