Random image

சூதாட்டத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி….சட்ட ஆணையம் பரிந்துரை

டில்லி:

பந்தயம், சூதாட்டம் போன்றவற்றை சட்டப்பூர்வமாக அறிவிக்க மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

பந்தயம், சூதாட்டத்திற்கு தடை உள்ளதால் தான் கருப்பு பணம் அதிகத்துள்ளது என்று சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. அதனால் இவற்றை சட்டப்பூர்வமானதாக ஆக்கிவிடலாம். இதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.

சூதாட்டத்தில் ஈடுபடுவோரின் ஆதார், பான் கார்டு எண்ணை இணைத்தால் கருப்புப் பணத்தை தடுக்கலாம். சூதாட்டத்துக்கு தடை இருப்பதால் தான் போட்டியின் போக்கு மாற்றப்படுகிறது என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.