சட்டம் சமமாகவும், நியாயமானதாகவும் இருக்க வேண்டும்: பிரசாந்த் பூஷண் வழக்கில் காங்கிரஸ் கருத்து

டெல்லி: சட்டம் சமமாகவும், சீரானதாகவும், நியாயமான மனப்பான்மையுடனும் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வழக்கில் காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பற்றி உச்ச நீதிமன்றத் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் செய்த ட்வீட் தொடர்பாக, நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய 2 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தாம் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று பிரசாந்த் பூஷண் குறிப்பிட்டுள்ளார்.

இந் நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில், இந்த விவகாரம் குறித்து மூத்த வழக்கறிஞராக இருக்கும் காங்கிரஸின் அபிஷேக் சிங்வி கூறியதாவது: சட்டம் சமமாகவும், சீரானதாகவும், நியாயமான மனப்பான்மையுடனும் இருக்க வேண்டும் என்று கூறினார்.

முன்னதாக நீதிமன்ற தீர்ப்பு குறித்து பிரசாந்த் பூஷண் கூறுகையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என்பது வேதனை தருகிறது. ஜனநாயகம், அதன் மதிப்புகளை பாதுகாக்க விமர்சனங்கள்  அவசியம்.

எனது ட்வீட்டுகள் வழியாக உயர்ந்த கடமையை நிறைவேற்றுவதாகவே கருதுகிறேன். மன்னிப்பு என்பது கடமையில் இருந்து விலகுவது போன்று  இருக்கும். நான் கருணை கேட்கவில்லை என்று கூறி இருந்தார்.