ஆண்களின் திருமண வயதை 21ஆக குறைக்க சட்ட கமிஷன் பரிந்துரை

டில்லி:

ண்களின் திருமண வயதை 21ல் இருந்து  18 ஆக குறைக்க வேண்டும் என்று மத்திய சட்ட கமிஷன் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

நமது நாட்டில் ஆண்களின் திருமண வயது 21 என்றும் பெண்களின் திருமண வயது 18 ஆகவும் சட்டமாக்கப்பட்டு உள்ளது. ஆனால், தற்போது நாடுகளில் வளர்ந்து வரும் பாலியல் வன்கொடுமைகள் காரணமாக ஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க மத்திய சட்ட கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.

நாட்டில் சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை ஒருசேர நடத்தலாம் என்று ஆலோசனை வழங்கியுள்ள மத்திய சட்ட கமிஷன், குடும்பநல சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களையும் தெரிவித்துள்ளது.

அதில், ஆண்களின் திருமண வயதையும், பெண்கள் திருமண வயதைப் போன்று 18 ஆக குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்து  உள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சட்ட கமிஷன்,  “பெரும்பாலான நாடுகளில் ஆண்களின் திருமண வயது 18 என அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. அனைத்து குடிமக்களும் தங்கள் அரசுகளை தேர்ந்தெடுக்கும் உரிமையும் அதே வயதிலேயே வழங்கப்பட்டு உள்ளது.  எனவே, அந்த வயதில் ஆண்களுக்கு  தங்களது துணையை தேர்ந்தெடுக்கும் திறனும் வந்து விடுகிறது  என்று தெரிவித்து உள்ளது.

மேலும், தற்போதைய வயது வித்தியாசம், மனைவியானவள் கணவனை விட இளமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தையே காட்டுகிறது.

ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்களின் பங்கை அங்கீகரிப்பது அவசியம் என்று கருத்து தெரிவித்துள்ள சட்ட கமிஷன், அவர்களுக்கும்  சொத்தில் சம பங்கு அளிக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்து உள்ளது.

சட்ட கமிஷனின் பதவிக்காலம் முடிவடைந்த  நிலையில், பல்வேறு தனிநபர் சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.