சென்னை:
ழக்கறிஞர்கள் போராட்டம் என்று விரும்பதகாத செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிகை எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

நேற்று சென்னை உயர் நீதிமன்ற  நீதிபதிகள் அடங்கிய குழு கூட்டம் நடைபெற்றது . இதில் நீதிமன்ற முற்றுகை போராட்டம் போன்ற விரும்பத்தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுவர்கள் மீது அரசியலமைப்பு வழங்கிய அதிகாரத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள நீதிமன்ற வளாகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, வழக்குரைஞர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் போன்ற பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அனைத்து நீதிபதிகள் அடங்கிய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் டி.ரவீந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்:
இன்று  (ஜூலை 22), ஜூலை 29 ஆகிய இரு தேதிகளில், 5 நீதிபதிகள் கொண்ட குழுவிடம் வழக்குரைஞர்கள் புதிய திருத்தங்கள் தொடர்பாக கருத்துகளை தெரிவிக்கலாம்.
பல்வேறு வழக்குரைஞர்கள் சங்கங்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை குழு, திங்கள்கிழமை (ஜூலை 25) சென்னை உயர் நீதிமன்ற முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தின் போது, நீதிமன்றத்துக்கு வரும் வழக்குரைஞர்கள், வழக்காடிகளை தடுக்கும் விதமாக நடக்கும் செயல்களை கட்டுப்படுத்த சில முக்கிய முடிவுகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதன் விவரம்:
சென்னை உயர் நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை, தமிழகம், புதுச்சேரி நீதிமன்ற வளாகத்திற்கு வந்து செல்லும் வழக்குரைஞர்கள், வழக்காடிகளுக்கு இடையூறாக இருப்பவர்கள் மீது அரசியலமைப்பு வழங்கிய அதிகாரத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது, நீதிமன்ற அவமதிப்பு சட்டப்படியும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர், உயர்நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக பதிவாளர் ஆகியோர் காவல்துறை, சி.ஐ.எஸ்.எஃப். ஆகியோருடன் இணைந்து போராட்ட நாளன்று முழு நடவடிக்கையையும் ஒளிப்பதிவு செய்ய வேண்டும். அப்போது விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்றாலும் அவற்றை பதிவு செய்ய வேண்டும்.
மாவட்ட தலைமை நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் ஆகியோர் அந்தந்த மாவட்டங்களில் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து, நீதிமன்றம், மற்றும் அதற்கு வெளியே நடைபெறும் விரும்பத் தகாத செயல்களை முழுமையாக ஒளிப்பதிவு செய்ய வேண்டும்.
அவ்வாறு ஒளிப்பதிவு செய்யப்பட்ட விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏதும் இருப்பின் உயர் நீதிமன்றத் தலைமை பதிவாளர், உயர்நீதிமன்ற மதுரை கிளை நிர்வாகப் பதிவாளர், மாவட்ட தலைமை நீதிபதிகள் அல்லது மாவட்ட நீதிபதிகள் ஆகியோர் உயர் நீதிமன்றத்துக்கு அறிக்கையாக அளிக்க வேண்டும்.
அதன்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னை பார் கவுன்சில், வழக்கறிஞர்கள் வெள்ளிக்கிழமைக்குள் தங்களது போராட்டத்தை நிறுத்திகொள்ள வேண்டும். மீறி போராட்டம் நடத்தினால் அவர்கள் வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிக்கப்படும் என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது உள்ளது குறிப்பிடத்தக்கது.