இந்தியா முழுவதும் போராட்டம் வெடிக்கும் –  வழக்கறிஞர்கள் எச்சரிக்கை

சென்னை:

ஸ்பெண்ட் செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ் பெறாவிட்டால் இந்தியா முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்று வழக்கறிஞர்கள் எச்சரிகை விடுத்து உள்ளனர்.

lawers

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட 126 வழக்கறிஞர்களை டெல்லி பார் கவுன்சில் சஸ்பெண்ட் செய்தது. மேலும் ஐகோர்ட்டு முற்றுகை போராட்டத்தின்போது 5 வழக்கறிஞர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது.

இதுகுறித்து, உயர்நீதி மன்ற வழக்கறிஞர்  வைகை  கூறியதாவது:

126 வழக்கறிஞர்களின் சஸ்பென்ட் உத்தரவை உடனே ரத்து செய்யவும், ஐகோர்ட் முற்றுகை போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 5 வழக்கறிஞர்களை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யவும் வழக்கறிஞர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் சட்டத்திருத்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக கீழமை நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட் தகவல் அனுப்பவில்லை என்றும், சட்டத்திருத்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிமன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்றார்.

மேலும் சட்டத்திருத்தத்திற்கு தடை கேட்ட மனுவையும் தள்ளுபடி செய்துவிட்டதாகவும் வழக்கறிஞர் வைகை குறிப்பிட்டார்.

126 பேரின் சஸ்பென்ட்டை ரத்து செய்யாவிடில் அனைவரையும் இடைநீக்கம் செய்யுமாறு ஆவேசமுடன் கூறினார்.

சட்டத்திருத்தத்தை திரும்ப பெறாவிடில் இந்தியா முழுவதும் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்த அவர், தமிழக வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக டெல்லியில் ஏற்கனவே போராட்டம் தொடங்கிவிட்டதாக குறிப்பிட்டார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: all over india, india, lawers struggle, Tamilnadu lawers association, warning, will start, இந்தியா, இந்தியா முழுவதும், சென்னை, தமிழ்நாடு, போராட்டம் வெடிக்கும், வழக்கறிஞர்கள் எச்சரிக்கை
-=-