‘விக்ரம்’ படத்தில் கமலுக்கு வில்லனாகிறாரா ராகவா லாரன்ஸ்…..?

‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு கமல் நடிப்பில் உருவாகும் படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது.

கமல் பிறந்த நாளை முன்னிட்டு, லோகேஷ் கனகராஜ் படத்தின் பெயருடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் வெளியானது . இந்தப் படத்துக்கு ‘விக்ரம்’ என அறிவித்துப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், தலைப்புக்கான டீஸரையும் வெளியிட்டது படக்குழு.

‘விக்ரம்’ திரைப்படம் முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. படத்தின் ப்ரீ ப்ரொடக்‌ஷன் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

கமல்ஹாசனுடன் மிக முக்கியமானக் கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடிக்கவுள்ளார் எனும் தகவல் வெளியாகியுள்ளது . 1998-ல் இருவரும் சேர்ந்து நடித்த ‘காதலா காதலா’ படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்குப்பிறகு கமல்ஹாசனுடன், பிரபுதேவா இணைந்து பணியாற்றவில்லை. கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்குப்பிறகு ‘விக்ரம்’ படத்தின் மூலம் கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்கயிருக்கிறார் பிரபுதேவா.

ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் கமலின் 232வது திரைப்படம் என்கிற நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. தற்போது அந்த டீசர் யூடியூபில் 20 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து இருப்பதாக ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தமது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளது.

அவரைத் தொடர்ந்து கமலுக்கு வில்லனாக நடிக்க ராகவா லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் நடிப்பதற்கு லாரன்ஸ் ஆர்வம் காட்டிவருகிறார். ஆகையால், விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனத் தெரிகிறது.