ஒருகோடி ரூபாய் சர்ச்சையில் லாரன்ஸ்!

அன்றைக்கு அப்படி..

ல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்த லாரன்ஸ், பிறகு, போராட்டத்தை திசை திருப்பியதாக விமர்சிக்கப்பட்டார். அதோடு, “போராட்டக்காரர்களுக்கு சோறு போட்டேன்” என்று அவர் பேசியது சர்ச்சையானது.

இப்போது அடுத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் லாரன்ஸ்.

“மொட்ட சிவா கெட்ட சிவா படம் ரிலீஸ் ஆவதில் இருந்த சிக்கல்களைப் போக்க, தனது சம்பளமான ஏழு கோடி ரூபாயை விட்டுக்கொடுத்தார் லாரனஸ்” என்று சொல்லப்பட்டது. இதை லாரன்ஸும் உறுதி செய்தார். சம்பளத்தை விட்டுக்கொடுத்ததோடு  கூடுதலாக ஐம்பது லட்ச ரூபாயை லாரனஸ் கொடுத்ததாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்கள்.

அதுக்கப்புறம் இப்படி..

அதே நேரம் தற்போது இன்னொரு செய்தி வந்திருக்கிறது.

அதாவது,  “மொட்ட சிவா கெட்ட சிவா” படத்தில் கிடைத்த சம்பளத்தில் ஒரு கோடியை இளைஞர்கள் தொழில் தொடங்க கொடுத்தார் லாரன்ஸ்” என்பதுதான் அந்த செய்தி.

”சம்பளத்தை விட்டுக்கொடுத்தது உண்மையா.. சம்பளம் வாங்கியது உண்மையா… ” என்று கோடம்பாக்கத்தில் கேள்வி எழுப்பும் பலர், “ஏன் இந்த வெளம்பரம்?” என்றும் எடக்காய் கேட்கிறார்கள்.