முதன்முதலாக இந்தியில் தடம் பதிக்கும் லாரன்ஸ்: இந்தியில் தயாராகும் ‘காஞ்சனா’

--

முதன்முதலாக இந்தியில் தடம் பதிக்க உள்ளார் பிரபல நடிகர், இயக்குனர், நடன இயக்குரன் ராகவா லாரன்ஸ். ஏற்கனவே தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற காஞ்சனா படத்தில் இந்தியில் தயாரிக்க உள்ளது. இதில், லாரன்ஸ் கதாபாத்திரத்தில் 2.0வில்லன் நடிகர் அக்ஷய் குமார் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

நடிகர் லாரன்ஸ் தயாரித்து இயக்கி, நடித்த காஞ்சனா படம் தமிழகத்தில் வெளியாகி ஹிட் கொடுத்தது.  கடந்த 2011-ம் ஆண்டு ராகவா லாரன்ஸ், சரத்குமார், கோவை சரளா,லக்‌ஷ்மி ராய், கோவை சரளா,தேவதர்ஷினி உள்பட பலர் நடித்த  “காஞ்சனா” படம் பெரும் வெற்றியை பெற்றது. அதைத்தொடர்ந்து  காஞ்சனா படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. ராகவா லாரன்ஸே இந்தியிலும் இயக்கி முதன்முதலாக பாலிவுட்டில் கால் பதிக்க  உள்ளார்.

இந்தி பதிப்பில், பிரபல 2.0 வில்லன் நடிகரான அக்ஷய்குமார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அக்‌ஷய் குமார் ராகவா லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் துவங்க உள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது.