“ஃப்ரீ செக்ஸ்” விலங்கு  பெண்மணி ராதா ராஜன் மீது அவதூறு வழக்கு!

ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றபோது, “ஃப்ரீசெக்ஸ் என்று சொன்னால் மெரினாவில் 50000 பேர் கூடுவார்கள்” என மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியிருந்தார் விலங்கு நல ஆர்வர் என அழைத்துக்கொள்ளும் ராதாராஜன் என்னும் பெண்மணி.

அவருடைய இந்தக் கருத்து  பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  வாட்ஸ் அப், முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ராதா ராஜனுக்கு கடுமையான கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்தன.

இதையடுத்து ராதா ராஜன், “எனது கருத்துகள் தமிழக மக்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால்  நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் ராதாராஜன் பேச்சு குறித்து,  பெண் வழக்கறிஞர்  ஆதிலட்சுமி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.