காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் தலைமறைவு

சென்னை

சென்னை அமைந்தக் கரையில் போக்குவரத்துக் காவலரை மிரட்டிய வழக்கறிஞர் தலைமறைவாகி உள்ளார்.

சென்னை அமைந்தக்கரையில் சாலையில் அமைந்துள்ள சிக்னலில் நிற்காமல் ஒரு வழக்கறிஞர் காரில் சென்றுள்ளார்.   போக்குவரத்துக் காவல்துறை காவலர் அவரை விரட்டிப் பிடித்துள்ளார்.  அந்தக் காரில் அமைந்தக்கரையை சேர்ந்த கோடீஸ்வரன் என்னும் வழக்கறிஞர் பயணம் செய்துக் கொண்டிருந்தார்.

காரை விட்டு இறங்கிய கோடிஸ்வரன் தன்னை விரட்டிப் பிடித்த காவலரை கண்டபடி திட்டி உள்ளார்.   மேலும் காவலருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் அவர் பேசி உள்ளார்.   இந்த சம்பவம் காவலர் சிவகுமாரால் மொபைலில் வீடியோவாக பதியப்பட்டது.   அவர் அந்தப் பதிவுடன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதை ஒட்டி கோடீஸ்வரன் மீது தகாத வார்த்தைகளால் திட்டுவது. அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுப்பது, மற்றும் கொலை மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.    தற்போது வழக்கறிஞர் கோடீஸ்வரன் தலைமறைவாக உள்ளார்.  அவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.