சென்னையில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை

advocateravione

சென்னை:

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவி. வழக்கறிஞர் தொழில் செய்கிறார். இன்று காலை  இவர் வீட்டைவிட்டு வெளியே வரும்போது,  வீட்டு வாசலில் வைத்து ஐந்து பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்தது. கண்ணிமைக்கும் நேரத்தில், மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வழக்கறிஞர் ரவியை கண்டந்துண்டமாக வெட்டியது. சம்பவ இடத்திலேயே ரவி பலியானார்.  அவர் இறந்ததை உறுதி செய்துகொண்ட கும்பல் தப்பிச் சென்றுவிட்டது.

தகவல் தெரிந்து வந்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.  பட்டப்பகலில் வீட்டு வாசலில் வைத்து வழக்கறிஞர் கொல்லப்பட்டது அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

You may have missed