ஈரோடு:
ழக்கறிஞர்கள் போராட்டம் வரும் 24ந்தேதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வழக்ஞகறிஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் ஒரு வார காலத்துக்குத் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு, புதுச்சேரி அனைத்து வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் திருமலைராஜன் தெரிவித்தார்.
ஈரோட்டில் நேற்று நடைபெற்ற மாநில அளவிலான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவர்  கூறியதாவது:

வழக்கறிஞர் சங்க தலைவர் திருமலைராஜன்
வழக்கறிஞர் சங்க தலைவர் திருமலைராஜன்

வழக்கறிஞர்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள்  பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தோம். இந்நிலையில், அகில இந்திய பார் கவுன்சில் சில மாறுதல்களை செய்து தருவதாக உறுதி அளித்துள்ளது. அதற்காக கால அவகாசம் வழங்க முடிவு செய்துள்ளோம்.
இடைநீக்கம் செய்யப்பட்ட 126 வழக்குரைஞர்களின் மீதான நடவடிக்கையை திரும்பப் பெறவும் வாய்ப்புள்ளது. எனவே, வழக்கறிஞர்கள் போராட்டத்தை ஒரு வாரம் வரை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் ஐகோர்ட்டு முற்றுகை
வழக்கறிஞர்கள் ஐகோர்ட்டு முற்றுகை

இதன்படி வழக்கறிஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றார்.