பாலியல் வன்கொடுமை: கைது செய்யப்பட்ட 17 பேருக்கும் ‘செம’ மாத்து

சென்னை:

சென்னையில் பரபரப்பு ஏற்படுத்திய மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேர் மீது கோர்ட்டு வளாகத்தில் வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் கடுமையான  தாக்குல்களை நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அயனாவரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள 17 பேரையும் காவல்துறையினர் இன்று சென்னையில் உள்ள மகளிர் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தினர்.

அவர்களை வரும் 30ந்தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பின் வெளியே வந்த அவர்கள் மீது அங்கிருந்த வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் அவர்கள்  17 பேரையும் சுற்றிவளைத்து கடுமையாக தாக்கினர். அடித்து உதைத்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் அவர்களை மீட்டு, வழக்கறிஞர்களிடம் இருந்து மீட்டு  சிறைச்சாலைக்கு கொண்டு சென்று சிறையில் அடைந்தனர்.