உதய்பூர் லட்சுமி விலாஸ் அரண்மனை மோசடியில் முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஷோரி மீது வழக்கு

உதய்பூர்:
தய்பூரில் உள்ள பரம்பரைச் சொத்தான லக்ஷ்மி விலாஸ் அரண்மனை மற்றும் உணவகத்தை விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு 244 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி மற்றும் முன்னாள் முதலீட்டாளர் பிரதீப் பைஜால் உட்பட 4 பேருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட அரஸ்ட் வாரண்டை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

மேலும் இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு சிபிஐ குழுவிற்கு குற்றம்சாட்டப்பட்டவர்களை நேரில் அழைத்து வர உத்தரவிடப்பட்டுள்ளது.

லட்சுமி விலாஸ் அரண்மனை மற்றும் உணவகம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் 7.5 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது, ஆனால் அதன் அப்போதைய உண்மையான விலை 253 கோடிக்கும் அதிகமாக இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கடந்த வாரம் அப்போதைய மத்திய அமைச்சராக இருந்த அருண் ஷோரி, முதலீட்டு செயலாளர் பிரதீப் பைஜால், லாசர்ட் இந்தியா லிமிடெட் நிர்வாக இயக்குனர் ஆஷிஸ் குஹா, மதிப்பீட்டாளர் காந்திலால் மற்றும் பாரத் உணவக இயக்குனர் ஜோத்ஸ்னா ஷோரி ஆகியோருக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இவர்களை கைது செய்ய உத்தரவிட்ட பின்னர், நீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து பிரதீப் பைஜால், குகா மற்றும் அருண் ஷோரி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இதனால் அவர்களை கைது செய்ய பிறப்பித்த அரெஸ்ட் வாரண்ட் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, மேலும் சிபிஐயிடம் இந்த வழக்கை மறுவிசாரணை செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.