புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில், 50% இயந்திரங்களுடைய விவிபிஏடி (வாக்காளர் சரிபார்ப்பு காகிதப் தணிக்கைப் பரிசோதனை) சீட்டுகளை எண்ண வேண்டுமாய் தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 21 தலைவர்கள்.

இந்த தலைவர்களில் பெரும்பாலானோர் தேர்தலுக்கு முந்தையக் கூட்டணியை கட்டமைத்துவிடவில்லை என்றபோதிலும், இந்த விஷயத்தில் அனைவரும் திரண்டு போராடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை ஒருங்கிணைத்தவர் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி. வாக்குப்பதிவு இயந்திரங்களின் மூலம், தேர்தல் மோசடிகள் நடைபெறலாம் என்ற அச்சமே இதற்கு காரணம்.

தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, டெரக் ஓ பிரைன் (திரிணாமுல் காங்கிரஸ்), காங்கிரசின் வேணுகோபால், லோக்தந்திரிக் கட்சியின் சரத் யாதவ், சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் சதீஷ் சந்திர மிஸ்ரா, திமுக தலைவர் ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லாத பல தலைவர்கள் மனுதாரர்களாக உள்ளனர்.

– மதுரை மாயாண்டி