முசாஃபர் நகர்

த்திரப்பிரதேசத்தில் நடந்த ரெயில் விபத்தில் மரணம் அடைந்தோருக்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உத்திரப்பிரதேசம் முசாஃபர் நகர் அருகிலுள்ள கத்தவுலி என்ற இடத்தில் நேற்று மாலை சுமார் 6.15 மணிக்கு கலிங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்துக்குள்ளானது.   இந்த ரெயில் பூரியில் இருந்து ஹரித்வார் நோக்கி சென்றுக்கொண்டிருந்தது.   கத்தவுலி அருகில் இந்த ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டன.   இந்த விபத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்ததாகவும்,  சுமார் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.   மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு மரணம் அடைந்தோருக்கு ரூ,3.5 லட்சமும், படுகாயம் அடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும்,  சாதாரண காயம் அடைந்தோருக்கு ரூ.25ஆயிரமும் நிவாரண தொகையாக அறிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துக்கு,  ஜனாதிபதி,  முதல்வர் உட்பட பல அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்