Random image

மாற்றுக் கட்சியினருக்கு வரவேற்பு உண்டு வாய்ப்பு இல்லை : ராகுல் காந்தி

போபால்

வேறு கட்சியிலிருந்து காங்கிரசில் தற்போது இணைந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்தியப் பிரதேசத்தில் தற்போது சுற்றுலா மேற்கொண்டுள்ளார்.   மத்தியப் பிரதேச சட்டப் பேரவை தேர்தலை ஒட்டி நடந்த பல நிகழ்வுகளில் கலந்துக் கொண்டார்.  அந்த வரிசையில் அவர் ஒரு காங்கிரஸ் ஊழியர் கூட்டத்தில் கலந்துக் கொண்டார்.    அந்த கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

அப்போது அவர், “காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் போது விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் பிரச்னைகளை தீர்க்க முதலில் முயற்சி எடுக்கப்படும்.   இரண்டாவதாக கட்சி ஊழியர்களின் பிரச்னை குறித்தும் மூன்றாவதாக கட்சி தலைவர்கள் பிரச்னைகள் குறித்தும் முடிவு எடுக்கப்படும்.

நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் வெகு நாட்களாக உள்ளவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும்.   மாற்றுக் கட்சியில் இருந்து தற்போது இணைவோர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.  மாற்றுக் கட்சியினருக்கு வரவேற்பு அளிக்கிறோம்.   ஆனால் வாய்ப்பு அளிக்கும் நிலையில் இல்லை.”என தெரிவித்துள்ளார்.