பிரதமர் வருகையை ஒட்டி தலைவர்கள் கைது ? :  அதிகாரபூர்வமற்ற தகவல்

--

சென்னை

சென்னை வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட உள்ள தலைவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.   தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான திமுக தலைமையில் பிரதமர் மோடி சென்னை வரும் போது கருப்புக் கொடி காட்டும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

நேற்று ஐபிஎல்லுக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் போராட்டம்  மேலும் பரபரப்பை உண்டாக்கியது.  அத்துடன் ஐபிஎல் போட்டிகள் வேறு மாநிலத்துக்கு மாற்றப்படும் என்னும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.   எனவே நாளை வரும் பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றால் அது ஆளும் கட்சிக்கும் சங்கடத்தை உருவாக்கலாம் என கருதப்படுகிறது.

அதை ஒட்டி கருப்புக்கொடு காட்டுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படும் அனைத்து தலைவர்களையும் இளைஞர் அமைப்பினரையும் காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்படலாம் என அதிகாரபூர்வமற்ற தகவல் ஒன்று தெரிவிக்கிறது.   மேலும் இந்த கைது நடவடிக்கைகள் இன்று இரவு முதல் ஆரம்பம் ஆகும் எனவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.