1
 
முதல்வர்  ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 22 ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று  உயிரிழந்தார்.  அவரத உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட உள்ளது. .
இந்த நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பல்வேறு அரசியில் கட்சி தலைவர்கள் இரங்கள் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் கருணாநிதி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி 
பிரதமர் மோடி தெரிவித்துள்ள இரங்கள் செய்தியில், “ஜெயலலிதாவின் மறைவு மிகுந்த வருத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதாவின் மறைவு இந்திய அரசியலில் மிகப்பெரிய ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது”
மம்தா பானர்ஜி 
திரிணா முல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ள இரங்கள் செய்தியில், “வலுவான, தைரியமான, திறமையான, மக்களின நண்பராக, கவர்ந்திழுக்கும் தலைவர் தான் அம்மா. எப்போதும் மக்கள் இதயத்திலேயே இருக்கிறார். இது மிக பெரிய இழப்பு. எனக்கு அதிர்ச்சியாமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. தைரியம் மற்றும் பெருந்தன்மை உடன், இந்த பெரிய இழப்பை தமிழக மக்களுக்கும், அதிமுக தொன்டர்களுக்கும் எதிர்கொள்ள வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
அன்புமணி ராமதாஸ் 
பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ள இரங்கள் செய்தியில், “அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல்நலம் தேறி வந்த அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும், வருத்தமும் அடைந்தேன். அவரது மறைவுச் செய்தியை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது.
இந்திய அரசியலில் பெண்களால் சாதிக்க முடியும் என்பதை அன்னை இந்திராகாந்திக்கு அடுத்து தமது வெற்றிகள் மற்றும் சாதனைகள் மூலம் நிரூபித்த தலைவர் ஜெயலலிதா. எந்த பின்புலமும் இல்லாமல் அரசியலுக்கு வந்து வியக்கத்தக்க வெற்றிகளைக் குவித்தவர் ஜெயலலிதா. ஆணாதிக்கம் நிறைந்த தமிழக அரசியலில் பெண்களால் சாதனைகளை படைக்க முடியும் என்பதற்கு உதாரணமாய் ஜெயலலிதா. ஜெயலலிதா அறிவுக்கூர்மையும், எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஒருமுறை கூறியவுடன் அதை முழுமையாக புரிந்து கொள்ளும் திறனும் பெற்றவர். ஜெயலலிதாவின் மறைவு அதிமுகவினருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அதிமுக தொண்டர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கள் செய்தியில், “முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார் என்ற செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, உடல் நலம் பெற்று மீண்டு வரவேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்தனர். தற்போது ஜெயலலிதாவின் மறைவு  சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஜெயலலிதாவை இழந்து வாடும் அதிமுக வினருக்கும், அவரது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
கனிமொழி
“திறமையும் தனித்துவமும் கொண்ட தலைவரை இழந்துவிட்டோம்” என்று மாநிலங்களவையின் திமுக உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தொல்.திருமாவளவன்
“ஜெயலலிதாவின் மரணம் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஒரு மிகப்பெரிய இழப்பாகும்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.