டில்லி:

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக மாட்டார் என்று முன்னாள் டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்து உள்ளார்.

17வது மக்களவைக்கான  தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த நிலையில், அமேதி தொகுதியிலும் ராகுல் தோல்வி அடைந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தோல்வி குறித்து கூட்டப்பட்ட காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், மூத்த காங்கிரஸ் தலைவர் களை கடுமையாக விமர்சித்த ராகுல், தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் இதை காங்கிரஸ் செயற்குழு ஏற்கவில்லை.

இந்நிலையில் ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவில் இருந்து மாற மாட்டேன் என பிடிவாதம் பிடித்து வந்த நிலையில், அவரை பிரியங்கா உள்பட பல தலைவர்கள், ராஜினாமா முடிவை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில்,  இன்று செய்தியாளர்களிடம் பேசிய டில்லி மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித், ராகுல் பதவி விலக மாட்டார் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

“நாங்கள் அவருடைய ராஜிநாமா ஏற்றுக்கொள்ள மாட்டோம், அவரை விட்டுவிட மாட்டோம்,” ஷீலா கூறினார். ராகுல் காந்தியின் தலைமையானது கட்சிக்கு ‘விலைமதிப்பற்றது’ என்று ஷீலா வலியுறுத்தினார்.