அடுத்தடுத்து லீக்காகும் தர்பார் படப்பிடிப்பு புகைப்படங்கள்…!

 

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு, கடந்த 10-ம் தேதி மும்பையில் தொடங்கியது . ரஜினி ஜோடியாக நயன்தாரா நடிக்க, மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். 2020-ம் ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகத் படப்பிடிப்புக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் கசிந்து வருகின்றன. தற்போது கசிந்துள்ள படத்தில் ரஜினி பேட் பிடித்து கிரிக்கெட் விளையாடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அவருக்குப் பின்னால் விக்கெட் கீப்பர் யோகி பாபு நிற்க, அந்தக் காட்சியை நயன்தாரா நின்றுகொண்டு ரசிப்பதுபோல் அமைந்துள்ளன.

தினமும் புகைப்படங்கள் கசிவதால், ‘தர்பார்’ படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Darbar, leak, nayanthara, rajini, social media
-=-