சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை

சென்னை:

தொடர்மழை காரணமாக, கல்வி நிலையங்களுக்கு கடந்த சில நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மழை காரணமாக இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், கடலூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை  அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுத்துள்ளனர்.