பெய்ரூட்: லெபனான் வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான லெபான் தலைநகர் பெய்ரூட் நகரில் 2 இடங்களில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் மிகப்பெரிய குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. அதில் அங்குள்ள ஏராளமான கட்டடங்கள் குலுங்கின.

நகரம் எங்கும் புகை மண்டலமாக காணப்பட்டதுது. குண்டு வெடித்த நிகழ்வு வீடியோவாக வெளியானது. இந்த சம்பவம் குறித்து லெபனான் பிரதமர் ஹசன் தியாப் கூறுகையில், தலைநகரையே அழிக்க திட்டமிட்ட சம்பவம். 2,750 டன் எடை கொண்ட அம்மோனியம் நைட்ரேட் என்ற பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், லெபனானில் இது போன்ற மிகப்பெரிய வெடிகுண்டு தாக்குதல் இதற்கு முன்பு நிகழ்ந்ததில்லை. இந்த தாக்குதல் தீவிரவாத தாக்குதல் போன்று இருக்கிறது என்றார்.

இந் நிலையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்துள்ள லெபனான் செஞ்சிலுவை சங்கம், பெய்ரூட் துறைமுகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.

4000க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்த பயங்கரை வெடி விபத்து எதனால், என்ன காரணத்துக்காக நிகழ்ந்துள்ளது என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.