சென்னை:

சென்னையில் விதிகளை மீறி புறம்போக்கு இடங்களிலும், ஏரிக்கரைகளிலும்  எல்இடி தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது குறித்து  விசாரணை நடத்த  சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள சாலையோர மின் விளக்குகளில்,  மின்சார உபயோகத்தை குறைக்கும் வகையில் எல்இடி விளக்குகள் பொருத்தப்படும் என தமிழகஅரசு கடந்த 2012ம் ஆண்டு அறி வித்தது. அதைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சியும் சென்னையில் உள்ள அனைத்து சாலை விளக்கு களும் எல்இடி விளக்குகளாக மாற்றப்படும் என அறிவித்து அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு, வேலைகளைத் தொடங்கியது.

ஆனால், பல இடங்களில் சரியான முறையில் விளக்குகள் அமைக்கப்படாமலும், ஏற்கனவே உள்ள பழைய கம்பத்திலேயே எல்டிஇ விளக்கு பொருத்தப்பட்டு இருப்பதாகவும் ஏராளமான புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், எல்இடி விளக்குகள் அமைக்கப்பட்டதில்,  திட்ட மீறல் விதிமுறைகள் குறித்து விசாரிக்க  கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

மின்சிக்கன நடவடிக்கையாக எல்இடி விளக்கு பெருமளவில் பொருத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்து, அதற்கான நிதி சேவைகள் கே.எஃப்.டபிள்யூ வழங்கி பணிகளை மேற்கொண்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, கடந்த வாரம் சென்னை கமிஷனர் பிரகாஷ் தலைமையில்,  சம்பந்தப்பட்ட அதிகாரி களுடன் மீட்டிங் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, இதுகுறித்து அறிக்கை அளிக்கும்படி அதிகாரி களுக்கு கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.

சென்னையில் உள்ள மக்கள் புழங்கும் சாலைகள் தவிர, அரசியல்வாதிகளின் தேவைக்கேற்ப, அவர்களின்   புறம்போக்கு நிலங்களிலும் எல்இடி விளக்குகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், அனுமதிக்கப்படாத ஏரி மற்றும் சாலை வசதி இல்லாத பகுதிகளிலும் விளக்குகள் அமைக்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன.

மக்கள் வசிக்கும் பகுதிகளில் விளக்குகள் அமைக்காமல், தேவையற்ற இடங்களில் விளக்குகள் அமைக்கப்பட்டு குறித்து ஏராளமான புகார்கள் எழுந்துள்ளன. அதுபோல சென்னையின் பல தெருக்களில், இடங்களில் சரியான முறையில் விளக்குகள் அமைக்கப்படாமலும், ஏற்கனவே உள்ள பழைய கம்பத்திலேயே புதிய  எல்டிஇ விளக்கு பொருத்தப்பட்டு இருப்பதாகவும் புகார்கள் கூறப்பட்டுள்ளது.

அம்பத்தூரில் முறையான சாலைகள் இல்லாத நிலத்தில் 500 க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், அதுபோல, மணலி, மாதவரம், திருவொற்றியூர், ஆலந்தூர் போன்ற பகுதிகளில் விதிகளை மீறி விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. கொரட்டூர் ஏரிக்கு அருகிலும் விளக்குகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், இவைகள் அனைத்தும் விதிகளை மீறி, அந்தப்பகுதி அரசியல் கட்சியினருக்கு ஆதரவாக அமைக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றச்சாட் டுக்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி சென்னை மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டு உள்ளார். இது மாநகராட்சி அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.