கறுப்பர் கூட்டம் மீது சட்டப்படி நடவடிக்கை! இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

சென்னை:

றுப்பர் கூட்டம் என்ற அமைப்பின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்  என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்  தெரிவித்து உள்ளார்.

தமிழ்க்கடவுள் முருகனின் கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக பதிவிட்ட கறுப்பர் கூட்டம் அமைப்பு மீது ஏராளமான புகார்கள் எழுந்துள்ளது.  தமிழகம் முழுவதும் பாஜகவினர், இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில்,  ‘ கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பிய கறுப்பர் கூட்டம் அமைப்பினர் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி, தவறாக அர்த்தம் கற்பிக்கப்பட்டது மிகவும் கண்டிக்கத் தக்கது என்றும்,  தமிழ் மக்களின் இல்லங்களில் அன்றாடம் ஒலிக்கும் பக்தி பாடல் கந்தசஷ்டி கவசம் என குறிப்பிட்டுள்ள அவர், இதை தவறாக விமர்சனம் செய்த கருப்பர் கூட்டம் என்ற அமைப்பின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.