சட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்!


சென்னை:

நாளை முதல் தமிழகத்தில் சட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.

சென்னையில் உள்ள‘ அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு சட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது.

சென்னை கிரின்வேஸ் சாலையில் அமைந்துள்ள  அம்பேத்கர் சட்டப்பல்கலைகழக வளாகத்தில் கலந்தாய்வு நடைபெறும் என பதிவாளர் பாலாஜி தெரிவித்துள்ளார்.

காலை 9.30 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும் எனவும், கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்வர்கள் முன்கூட்டியே வரும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.