மீ டூ:   “கறுப்பு ஆடு லீனா மணிமேகலை!”: சுசி கணேசன் மனைவி காட்டம்

மி டூ இயக்கத்தில் நுழைந்துள்ள கருப்பு ஆடு என்று கவிஞர் லீனா மணிமேகலையை,  இயக்குனர் சுசிகணேசனின் மனைவி மஞ்சரி காட்டமாக விமர்சித்துள்ளார்.

இயக்குநர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக  பெயர் குறிப்பிடாமல் கவிஞர் லீனா மணிமேகலை கடந்த 2005ஆம் ஆண்டு ஒரு முகநூலில் பதிவிட்டிருந்தார்.

மீ டூ ஹேஷ்டேக் மூலம்  தாங்கள் அனுபவித்த பாலியல் சீண்டல்களை பெண்கள் பலரும் சமூக வலைதளத்தில் பகர்ந்து வரும் நிலையில், அந்த இயக்குநர் சுசி கணேசன்தான் என்று சில நாட்களுக்கு முன் பதிவிட்டார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த சுசிகணேசன், லீனா மணிமேகலை மீது வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த நிலையில் சுசிகணேசனிம் மனைவி மஞ்சரி, “மீ டூ இயக்கத்தில் நுழைந்தருக்கும் கறுப்பு ஆடு லீனா மணிமேகலை” என்று சாடியுள்ளார்.

சுசிகணேசன் – மஞ்சரி

இது குறித்தி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

“பாதிக்கப்பட்டவரின் மனைவியாக, நானும் லீனா மணிமேகலையின் செய்தியாளர்கள் சந்திப்பைக் கண்டேன். அதில் பாடகி சின்மயி செய்தியாளர்கள் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

ஆனால் நடந்தது என்ன  என்ற எளிமையான கேள்விகளைக் கேட்ட போது கூட செய்தியாளர்களை பார்த்து லீனா மணிமேகலை கூச்சலிட்டதைக் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. லீனா மணிமேகலை நேர்மையானவர் என்றால்,    உண்மையை வெளிப்படுத்துவதற்கான அந்த வாய்ப்பை பயன்படுத்தி இருக்க வேண்டும்.

அதிலும் ஒரு பெண் செய்தியாளரைப் பார்த்து, ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இதுபோன்று கேள்வி கேட்க அசிங்கமாக இல்லையா என்றும் லீனா கேட்டார். . இதில் பாலினம் என்ற விஷயம் எங்கிருந்து வந்தது?  பெண் என்ற அடையாளத்தை வைத்து லீனா மணிமேகலை பொய்யை மறைக்கிறார். பாலின சமத்துவத்தை அவர் விரும்பினால்,  அனைத்துக் கேள்விகளுக்கும் துணிச்சலாக பதில் அளித்திருக்க வேண்டும்.

லீனா மணிமேகலை

செய்தியாளர்கள் கேட்ட இதே கேள்விகளைத் தான் நானும் கேட்க விரும்புகிறேன். சுசிகணேசன் அத்துமீறியதாகக் கூறப்படும் சம்பவம் நடந்தது எங்கே? என்ன நேரம்? எந்த தெரு?.

லீனா மணிமேகலையின் பொய்களை நம்புவோர் இந்த எளிமையான கேள்விகளுக்கு அவரை அளிக்க சொல்லுங்கள். இந்தக் கேள்விகள் ஒன்றும் புரட்சிகரமான கவிஞருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடாது.

நல்லதை விட கெட்டதை மனித மனம் அதிகம் நினைவில் கொண்டிருக்கும். அந்த வகையில், கற்பனையில் உதித்த இந்தச் சம்பவத்தின் எளிமையான விஷயங்கள் கூடவா லீனாவின் நினைவில் இல்லை? மி டூவின் ஏமாற்றுக்காரியான லீனா, அந்த இயக்கத்திற்கே அவமானத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

மி டூ இயக்கத்தின் கருப்பு ஆடு லீனா மணிமேகலை.

மேலும் பலரது பெயர்களை தனது மனநிலையைப் பொருத்து வெளியிடுவதாக கூறியுள்ளார். அப்படியானால் அவர்களை எல்லாம் பிளாக் மெயில் செய்கிறாரா? காவல்துறை, நீதிமன்றம் மீதெல்லாம் நம்பிக்கையில்லை என்று கூறும் சின்மயி, லட்சுமி ராமகிருஷ்ணன் போன்றவர்கள், ஊடகங்களுக்கு சாயம் பூசுகிறார்கள். எதை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். லீனாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் சற்று சிந்தியுங்கள்” என்று  மஞ்சரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.