கர்நாடகாவில் பயங்கரம்: சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை…..

மைசூரு::

ர்நாடகா மாநிலம் சிவமோகா பகுதியில் சிறுத்தை ஒன்று சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த நாயை அடித்து இழுத்துச்செல்லும் காட்சி வெளியாகி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

சம்பவத்தன்று  சிவமோகா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளியில் இரவு நேரத்தில் உலா வந்த சிறுத்தை ஒன்று, அந்த பகுதியில்  பூட்டியிருந்த வீட்டில் இருந்து நாய் குரைக்கும் சத்தம் கேட்டதும், அந்த  வீட்டின் மதில் சுவரை  ஏறி குதித்த சிறுத்தை, வீட்டிற்குள் இருந்து குரைத்த  நாயை அடித்து இழுத்துச் செல்லும் சிசிடிவி வீடியோ காட்சி  வெளியாகி உள்ளது. இது  அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் சிறுத்தை சர்வசாதாரணமாக வீட்டிற்குள் புகுந்த  சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. வனத்துறையினர் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.