குஜராத் : தலமைச் செயலகத்துக்குள் சிறுத்தை நுழைந்தது

காந்திநகர்

காந்தி நகரில் உள்ள தலைமை செயலகத்துக்குள் சிறுத்தை ஒன்று நுழைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

குஜராத் மாநில தலைநகர் காந்திநகர். இங்கு அம்மாநில தலைமை செயலக வளாகம் ஆமிந்துள்ளது. இந்த வளாகம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு ஒரு அதிர்ச்சி தரும் காட்சி அந்த காமிராவில் பதிவாகி உள்ளது.

அந்த பதிவில் ஒரு சிறுத்தை குஜராத் மாநில தலைமை செயலக வளாகத்தின் பூட்டிய இரும்புக் கதவின் கீழ்ப்பகுதி வழியாக உள்ளே நுழையும் காட்சி பதிவாகி உள்ளது. சிறுத்தை நுழையும் போது காவலர்கள் கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அதன் பிறகு அதை கவனித்த காவலர்கள் தடுப்பு வேலிகள் அமைத்துள்ளனர். தற்போது தீவிர கண்காணிப்பின் கீழ் உள்ள அந்த வளாகத்துக்குள் யாரும் இன்று அனுமதிக்கப்படவில்லை.

வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.