கொரோனா தொற்று நோய் திருப்பதி ஏழுமலையான் கோயிலை மூட வைத்து விட்டது.
தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களிலும், நடந்தும் சென்று வெங்கடேசனை தரிசனம் செய்து வந்தனர்.


இதனால் திருமலையில் எப்போதும் ‘ஜே..ஜே’ என்று கூட்டம் நிரம்பி வழியும்.
கோயில் அடைக்கப்பட்டு விட்டதால், சில பூஜாரிகள், சொற்ப ஊழியர்கள் மட்டுமே மலையில் உள்ளனர்.
மக்கள் நடமாட்டம் அறவே குறைந்து விட்டதால், வனப்பகுதியில் பதுங்கி இருந்த சிறுத்தைகள்,கரடிகள் போன்ற விலங்குகள் கோயிலுக்கு செல்லும் பாதைகளில் சுதந்தரமாக நடமாடுகின்றன.
இந்த விலங்குகளை பகலிலும் பார்க்க முடிகிறது. அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள். இதனால் பீதி அடைந்துள்ளனர்.
‘இரவில் யாரும் வீட்டை விட்டு வர வேண்டாம்’’ என்று வன அதிகாரிகள் மக்களை எச்சரித்துள்ளனர்..