ஐதராபாத் நெடுஞ்சாலையில் ஹாயாக ஓய்வெடுத்த சிறுத்தை… வீடியோ

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சிறுத்தை ஒன்று அங்குள்ள நெடுஞ்சாலை யில் ஹாயாக ஓய்வெடுத்து வரும் வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், மக்கள் மற்றும் வாகனங்கள் அணிவகுப்பு இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால்,  வனவிலங்குகள் தங்களது வனப்பகுதியை விட்டு சுதந்திரமாக சாலைகளில் சுற்றித்திரிவது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில்,  ஐதராபாத்தின் மைலர்தேவபள்ளியில் ஒரு பிரதான சாலையில் சுற்றித் திரிந்த சிறுத்தையைக் கண்ட மக்கள் பீதி அடைந்தனர்.

அந்த சிறுத்தை சாலையில் அங்குமிங்குமாக ஹாயாக நடந்தும், இன்று (வியாழக்கிழமை) காலை சாலையின் ஓரத்தில் ஹாயாக படுத்துக்கொண்டும் போஸ் கொடுத்தது. பின்னர் அந்த பகுதியில்,  பின்னர் மைலர்தேவ்பள்ளி  சாலையின் ஒரு பகுதியில்ஒய்யாரமாக ஓய்வெடுப்பதைக் காண முடிந்தது.

இதனால் அந்த பகுதியில் வசித்து வரும் மக்கள், சாலையோர கட்டிடங்களில் வசிக்கும் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதுகுறித்து  பல வாகன ஓட்டிகளும் உள்ளூர்வாசிகளும் காவல்துறையினரை எச்சரித்தனர், அவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதற்கிடையில் அந்த சிறுத்தை மீது சிலர் தாக்குதல் நடத்தியதால், அது காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. விரைந்து வந்த வனத்துறையினர், காயமடைந்த சிறுத்தையை மீட்க முயற்சி மேற்கொண்டனர்.

இந்த நிலையில், அந்த சிறுத்தை  சாலையிலிருந்து ஓடி அந்த பகுதியில் உள்ள  கைவிடப்பட்ட தொழில்துறையின் வளாகத்திற்குள் நுழைந்தது. அதைத் தேடுவதற்கான தேடல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.