புதுடெல்லி:

மாமிசத்தை குறைத்து காய்கறியை உணவில் அதிகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக, ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

ஊட்டச் சத்து, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் ஆய்வறிக்கையில் கீழ்கண்டவாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இறைச்சியை அதிகம் எடுத்துக் கொள்வதால் உடல்நலம் பாதிக்கப்படும். முட்டைகள் வாரத்துக்கு 4-க்கு குறைவாக உண்ண வேண்டும்.

உணவுப் பழக்கம் சுற்றுச் சூழலை எப்படி பாதிக்கிறது என்பது சமீபத்திய ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.

இஏடி அமைப்பு சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கையில், உணவு முறையில் முன்னேற்றம் அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

2050-ஆண்டுக்குள் மாபெரும் உணவு மாற்றம் ஏற்படுவது அவசியம் என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.