கோவிட் -19 தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இறப்பு விகிதம் தொடர்ந்து வருவது ஏன்?

இந்தப் போக்கிற்கு பாதிக்கப்பட்டவர்களின் வயது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று யூகிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சமூக இடைவெளியும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது

அரசின் கோவிட் -19 டாஷ்போர்டில், மிகக் குறைந்தபட்ச எண்ணிக்கை பதிவான ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து ஏழு நாள் சராசரி 574 ஆகக் குறைந்துவிட்டதாகக் காட்டுகிறது. ஆகஸ்ட் 30 க்குள் இது இருமடங்காக அதிகரித்து, ஒரு நாளைக்கு 1,402 ஆக உள்ளது. ஆயினும்கூட, அதே காலகட்டத்தில் இறப்பு விகிதம் ஒரு நாளைக்கு சராசரியாக 37.4 ஆக இருந்து ஒரு நாளைக்கு 4.6 ஆக படிப்படியாகக் குறைந்துள்ளது. அனால், அதற்கான சரியான காரணம் எவருக்கும் தெரியவில்லை.

குறைவான வயதுடைய புதிய நோயாளிகள்

பப்ளிக் ஹெல்த் இங்கிலாந்து கூற்றுப்படி, ஆகஸ்ட் கடைசி வாரத்தில் பதிவான நோயாளிகளில் மூன்றில் இரண்டு பங்கு 40 வயதிற்குட்பட்டவர்கள் என்று கூறுகிறது. இது சமூகமயமாக்கல் தொடர்பான தளர்வான விதிகளுடன் இணைக்கப்பட வாய்ப்புள்ளது. தொற்றுநோயின் உச்சத்தில், 28% நோயாளிகள் 40 வயதுக்கும் குறைவானவர்களாக இருந்தனர்.

பாதுகாக்கப்படும் பாதிக்கப்படக்கூடிய அபாயத்தில் இருக்கும் மக்கள்

பிஹெச்இ தரவுகளின்படி – 70 வயதிற்கு மேற்பட்டவர்களில், ஏப்ரல் முதல் வாரத்தில் கோவிட் உறுதியான   10,770 பேருடன் ஒப்பிடும்போது, ஆகஸ்ட் முதல் வாரத்தில் 374 பேர் மட்டுமே கோவிட் -19 உறுதி செய்யப்பட்டனர். இந்த வயதிற்குட்பட்டவர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளானால் அவர்கள் தீவிரமாக நோய்வாய்ப்படும் அபாயத்திற்கு உள்ளாகக் கூடும். இருப்பினும், அவர்களில் பெரும்பாலோர் ஒரு சுயமாக செயல்படும்  தொண்டு சுகாதார அமைப்பான கிங்ஸ் ஃபண்டின் மூத்த சக டாக்டர் வீணா ராலேயின் கூற்றுப்படி, நோய்க்கு வெளிப்படாமல்  பாதுகாக்கப்படுகின்றனர்.

மேம்படுத்தப்பட்ட சிகிச்சை

ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகளின்படி, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் ஏற்பட்ட இறப்பு விகிதம் ஜூன் மாதத்தில், ஏப்ரல் மாதத்தை விட நான்கு மடங்கு குறைவாக உள்ளனர். அதற்கு பிறகான அதிகரித்த வென்டிலேட்டர் உபயோகம், CPAP போன்ற சாதனங்களின் போன்ற நவீனமயமாக்கப்பட்ட சிகிச்சை முறைகளை மருத்துவமனைகள் மேம்படுத்தியது முக்கிய காரணமாக அமைந்தது. ஸ்டீராய்டு மருந்துகளான டெக்ஸாமெதாசோன் மற்றும் ஹைட்ரோகார்டிசோன் இரண்டும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இறப்பு விகிதத்தைக் குறைக்கின்றன.

அதிகரிக்கப்பட்ட தினசரி சோதனைகள் மிதமான தொற்றையும் அதிக அளவில் கண்டறிகிறது. எனவே, தொற்றின் விகிதம் அதிகரித்தாலும், இறப்பு விகிதம் குறைவதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.

சமூக இடைவெளி குறித்த விழிப்புணர்வு

மக்களிடையே சமூக இடைவெளி குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், தற்போதைய நிலையில் மிதமான தொற்றே அதிக அளவில் ஏற்படுகிறது மற்றும் கண்டறியப்படுகிறது.மேலும் முகக் கவசம் அணியும் பழக்கம், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவை தொற்றும் வைரஸ்களின் எண்ணிக்கையைக் குறைகிறது. எனவே இது வைரஸ் தொற்றாக இருந்தாலும், அவை மிதமானதாகவே இருக்கிறது.  இது இறப்பு ஏற்படுத்தும் அளவுக்கு தீவிரமானது அல்ல.

நோய்தொற்றும் வைட்டமின் D-யும்

சில ஆராய்ச்சியாளர்கள் வைட்டமின் D குறைபாட்டிற்கும் கோவிட் -19 இறப்பு விகிதங்களுக்கும் இடையில் ஒரு தொடர்பு இருப்பதாக கணித்துள்ளனர். அதை மெய்ப்பிக்கும் வகையில் அமெரிக்காவில் கோடை காலத்தின் போது நோய்தொற்று விகிதம் மட்டுபட்டிருந்தது. விட்டமின் D உற்பத்தி மனிதர்களுக்கு சூரிய ஒளியினால் தூண்டப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்படக்கூடிய அபாயத்தில் இருந்தவர்களின் எண்ணிக்கை குறைவு

இதுவரை இங்கிலாந்தில் இறந்தவர்களில் குறைந்தது 21,775 பேர் பராமரிப்பு இல்லத்தில் வசிப்பவர்கள். ஆயினும் மொத்த பராமரிப்பு இல்ல மக்கள் தொகை மட்டும் 330,000. மேலும் 350,000 பேர் வீட்டில் இருந்து பராமரிக்கப்படுகிறார்கள். எனவே கடுமையான நோய் வாய்ப்படும் அபாயத்தில் இருப்பவர்கள் இன்னும் அதிக அளவில் உள்ளனர்.

கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி

இதுவரையிலான ஆன்டிபாடி சோதனை ஆய்வுகள் லண்டனில் சுமார் 13% முதல் 17% வரை வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்று மதிப்பிட்டுள்ளன, இது இங்கிலாந்தில் வேறு எங்கும் காணப்பட்டதை விட மிக அதிகப்பட்ச விகிதம் ஆகும். ஆனால் சமூகத்தில் கூட்டு நோய் எதிர்ப்பு சக்தியையைக் காண 70% மக்களேனும் நோய் தொற்றுக்கு ஆளாக வேண்டும். எனவே கூட்டு நோய் தொற்றுக்கு தேவையான நோய் தொற்று விகிதத்துடன் ஒப்பிடும்போது மேற்கூறப்பட்ட விகிதம் மிக மிகக் குறைவு ஆகும். சாதாரண சளி போன்ற பிற சுவாச கொரோனா வைரஸ்களுக்கான நோய் எதிர்ப்பு சக்தி பல மாதங்களுக்கு நீடிக்கும், ஆனால் பின்னர் மங்கிவிடும், எனவே பாதிக்கப்பட்டவர்கள் கோவிட் -19 ஐ என்றென்றும் விலக்க முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

கோவிட் -19 பலவீனமடைகிறதா?

கோவிட் -19 மாற்றத்திற்கு உள்ளாகி வருவதாக மரபியல் வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர், ஆனால் அம்மாற்றம் கொரோனாவை பலவீனமடைய செய்வதாக அல்லது கடுமையானதாக ஆக்குவதாக கூறுவதற்கு உறுதியான ஆதாரமும் இருப்பதாகத் தெரியவில்லை என கூறுகின்றனர்.