டில்லி

நாடெங்கும் உள்ள ஐஐடியில் 3% குறைவான அளவில் தலித் மற்றும் பழங்குடி ஆசிரியப் பணியாளர்கள் உள்ளதாக மத்திய அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

அரசு நிறுவனங்களில் தலித் மற்றும் பழங்குடியினருக்கு அரசு இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடு சதவிகிதம் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. மத்திய அரசு கீழ் உள்ள துறைகளிலும் இந்த இடஒதுக்கீடு கடைபிடிக்கப் படுகிறது. மத்திய அரசால் நடத்தப்படும் தொழில் கல்வி நிறுவனம் ஐஐடி ஆகும். இந்த ஐஐடி கிளைகள் பல இந்திய நகரங்களில் செயல்பட்டு வருகின்றன.

இந்த ஐஐடி கிளைகளில் உள்ள தலித் மற்றும் பழங்குடி பணியாளர்கள் குறித்து கேள்வி ஒன்று பாராளுமன்றத்தில் கேட்கப்பட்டது. இதற்கு மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “ஐஐடி யில் ஆசிரியப் பணியாளர்கள் நுழைவின் போது இட ஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்படுகிறது. அதாவது விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத் துறைகளில் துணை பேராசிரியர் நிலையில் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். அப்போது மட்டுமே இட ஒதுகீட்டு முறை பின்பற்றப்படுகிறது.

அதே போல் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணியமர்த்தும் போதும் அதே முறை பின்பற்றப்படுகிறது. இதில் தலித் மக்களுக்கு 15% மற்றும் பழங்குடியினருக்கு 7.5% மற்றும் பிற்படுத்த பட்டோருக்கு 27% என இட ஒதுக்கீடு முறை அமுலில் உள்ளது. ஐஐடியில் ஆசிரியப் பணியில் 6043 பேர் உள்ளனர். இவர்களில். தலித்துகள் 149 பேரும் பழங்குடியினர் 21 பேரும் உள்ளனர். இது மொத்த ஊழியர்களில் 2.8% ஆகும்” என தெரிவித்துள்ளார்.

நகர வாரியாக ஆசிரியப்பணியில் உள்ள தலித் மற்றும் பழங்குடியினர் விவரம் பின் வருமாறு :

நகர்                      தலித் பழங்குடியினர்
காரக்பூர்                     8                     0
மும்பை                       5                     0
சென்னை                  13                   2
டில்லி                           10                   2
கான்பூர்                       3                   0
ரூர்கி                           10                   2
கவுகாத்தி                 16                  3
BHU                                19                   3
ஜபல்பூர்                       2                  0
ரோபர்                         4                   0
இந்தூர்                       2                   0
பாட்னா                     6                     0
காந்திநகர்               1                   0
ஐதராபாத்                6                    1
புவனேஸ்வர்          4                  0
மணாலி                   0                  0
தன்பாத்                 29                  6
ஜம்மு                       1                    0
திருப்பதி                2                    1
பாலக்காடு           4                     0
தார்வார்                1                     1
கோவா                   1                     0
பிலாய்                    2                      0
மொத்தம்           149                    21