கொரோனா தொற்றால் எதிர்வரும் நெருக்கடிகள் மற்றும் சேதங்களைத் தவிர்க்க தொழிலாளர்கள் மிகவும் கவனமுடனும், பாதுகாப்புடனும் வேலை செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். யாரேனும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் நோய்வாய்பட்டால், அவர்களால் பணிபுரிய இயலவில்லை என்றால், அவர்களுக்கு வேலை பாதுகாப்பு இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றனர்.

ஊரடங்கு தளர்வு துவங்கியபிறகு, ஆஸ்திரேலியாவில் இரண்டாவது சுற்று கொரோனா வைரஸ் தொற்றுநோய்களைத் தவிர்க்க வேண்டுமானால், தகவல்தொடர்பு மேம்பாடுகள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் பயிற்சி, ஆரம்ப தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் சமூக இடைவெளி ஆகியவை தற்போதைய நிலையில் முக்கிய தேவைகளாக கூறப்படுகின்றன. அரசாங்கம் தனது கோவிட்சேஃப் டிரேசிங் பயன்பாட்டை கட்டாயமாக்கி உள்ளதை அடுத்து, தலைமை மருத்துவ அதிகாரி பிரெண்டன் மர்பி, ஏப்ரல் மாதத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகளின் கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கைகளின் திறனை அதுகப்படுத்தியுள்ளார்

நாடு முழுவதும் வைரஸைக் கட்டுப்படுத்துவதில் ஆஸ்திரேலிய அரசு ஒப்பீட்டளவில் வெற்றி பெற்றிருந்தாலும், கொரோனா பரவல் கட்டுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு உதவ அரசாங்கம் தனியார் மருத்துவமனைகளின் உதவியை நாடியிருந்தது. இருந்தாலும், நியூமார்ச் ஹவுஸ், சிடார் மீட்ஸ் கைவினை தொழிற்சாலை மற்றும் வடமேற்கு டாஸ்மேனியா உள்ளிட்ட பகுதிகள் எதிர்காலத்தில் ஏற்படும் இதுப்போன்ற நோய் பரவல் காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற படிப்பினையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச எல்லைகளை மூடுவது மட்டுமே மீண்டும் ஒரு தோல்வியை சந்திக்க வாய்ப்பளிக்கும் என்பதால், முன்னணி தொற்றுநோயியல் நிபுணர்கள் ஒன்றிணைந்து, ஆஸ்திரேலியாவில் இரண்டாவது சுற்று கொரோனா பரவலை தடுக்கும் வழிமுறைகள் மற்றும் கொள்கைகளை வடிவமைத்து வருகின்றனர்.

நியூமார்ச் ஹவுஸ்

ஒரு வயதானவர்கள் பராமரப்பு இல்லத்தில் ஆறு ஷிப்ட்கள் பணிபுரிந்த ஒருவர், ஏப்ரல் 11 அன்று, லேசான அறிகுறிகளுடன் முதல் நோயாளியாக பதிவு செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குள், சிட்னியின் மேற்கில் இருந்த அந்த வயதானவர்கள் பராமரிப்பு இல்லம், நாட்டின் மிக மோசமான கோவிட் -19 ஹாட்ஸ்பாட்களில் ஒன்றாகிப் போனது.  வெள்ளிக்கிழமை நிலவரப்படி, வயதானவர்கள் பராமரிப்பு இல்லத்துடன் தொடர்புடைய 69 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளாக (அதில் 37 பேர் குடியிருப்பாளர்கள்) பதிவு செய்யப்பட்டனர். அதில், 17 வது குடியிருப்பாளர் மரணமடைந்ததாக  சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. நாட்டிலேயே முதன்முறையாக, வயதானவர்கள் பராமரிப்புத் துறை கடுமையான சமூக இடைவெளி கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் ஒரு நேரத்திற்கு இரண்டு பார்வையாளர் என்ற வரம்பு, ஒரு  குடியிருப்பாளரின் அறையில் ஒரு நாளைக்கு ஒரு முறை சந்திப்பு என தேசிய அளவில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. பலரும் மேலும் சென்று, பார்வையாளர்களின் நேரடி வருகையை முற்றிலுமாக தடை செய்தனர்.

பராமரிப்பு இல்லங்களில் தங்கியிருக்கும் அனைவரும் அவர்களது குடும்பத்தினருடனான தொடர்புடன் இருப்பதை உறுதி செய்வதற்காக, பார்வையாளர்கள் வருகையை முறைப்படுத்தும் நோக்கில் ஒரு தேசிய குறியீட்டை இறுதி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நியூமார்ச் ஹவுஸில் மோசமடைந்து வரும் நிலைமை இருப்பதால்,  கொரோனா ஆரம்ப அறிகுறிகள் மற்றும் நிகழ்வுகளுக்கு நடவடிக்கை எடுக்கும் வகையில், அதன் முறையை மாற்ற வேண்டும் என்று தடயவியல் மருத்துவ பேராசிரியரும் தடயவியல் மருத்துவத் தலைவருமான ஜோசப் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள பிற வயதான பராமரிப்பு மையங்களில் கொரோனா பரவல் காணப்பட்டாலும், குறிப்பாக சிட்னியில் உள்ள டோரதி ஹென்டர்சன் லாட்ஜிலும், நியூமார்ச் ஹவுசில் வசிப்பவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டால், பின்னர் வீட்டிலேயே இருக்க அனுமதிக்கக் கூடாது என்று இப்ராஹிம் கூறினார்.

ஏனெனில், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் – கையுறைகள், முகக்கவசம் போன்றவை, அனுபவமுள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கே முறையாக பயன்படுத்துவது என்பது கடினமாக உள்ளது. எனவே, வயதானவர்கள் பராமரிப்பு இல்ல பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் மிகவும் கடினமாக  இருக்கும். எனவே இந்த ஊழியர்களுக்கு சரியான பயிற்சி இல்லை என்பதால், அவர்கள் அவர்கள் விமர்சிக்கப்படக்கூடாது. எனவே, தற்போதைய நிலைமையில், நாங்கள் அவர்களை புற்றுநோயியல் நோயாளிகளுடன், பொதுவாகக் காண்பிக்கக் கூடிய அளவுக்கான கவனத்தை செலுத்த கேட்டுக் கொண்டுள்ளோம்” என்றார்.

பல நியூமார்ச் ஊழியர்களுக்கு எதிராக PPE நெறிமுறையின் மீறல்கள் குறித்து சம்மன்  செய்யப்பட்டுள்ளன. தேவைப்படும் தொற்று கட்டுப்பாடு மற்றும் வயதானவர்கள் பராமரிப்பில் ஈடுபடும் நடவடிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மீறல்களை எதிர்பார்க்கலாம் என்று இப்ராஹிம் கூறினார். “இது எல்லோரும் நினைப்பது போல் நேரடியானதல்ல. தற்போது 30 ஊழியர்கள் பணியில் இருப்பதாகச் கொண்டால், அவர்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை ஒரு குடியிருப்பாளரைப் பார்க்க வேண்டும். அதாவது அவர்கள் PPE உடையை 90 முறை போட்டு கழற்ற வேண்டும். இது போன்று 180 பயன்பாட்டு நிபந்தனைகள் உள்ளன. எனவே அவர்கள் 90% முறை சரியாகப் பின்பற்றினால் கூட, இன்னும் 18 மீறல்கள் மீதமுள்ளன.” என்றார்.

நியூமார்ச்சில் மேலும் பரவுவதைத் தடுக்க, மீதமுள்ள கோவிட் -19 உறுதியான நோயாளிகளை குடியேற்றுவதும், அங்கிருந்து மக்களை வெளியேற்றுவது என்பது மிகவும் தாமதமான நடவடிக்கை என என்று இப்ராஹிம் கூறுகிறார், ஆனால் அரசாங்கங்கள் வயதானவர்கள் பராமரிப்பு மையக் கட்டுப்பாட்டாளர்களை வீடுகளின் குழுக்களுக்குப் பொறுப்பேற்க நியமிக்க வேண்டும் என்றும், PPE தொடர்பான தொற்றுநோய்கள் மற்றும் சிக்கல்களைப் புகாரளிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

சிடார் இறைச்சிகள்

கோவிட் -19 உறுதியான 62 நோயாளிகளுடன், இப்போது இணைக்கப்பட்டுள்ள மெல்போர்ன் இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையின் இரண்டு ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தால் கூறப்பட்டுள்ளது. இது விஞ்ஞானிகள் ஏற்கனவே எச்சரித்திருந்ததின் அவசியத்தை உணர்த்துவதாக இருந்தது. ஆபரேட்டர் சிடார் மீட்ஸ் நிறுவனம், விக்டோரியன் சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையினரால், ஏப்ரல் 27 அன்று, அவர்களின் ஒரு ஊழியர் முந்தைய நாள் கொரோனா உறுதியானதாக அறிவிக்கப்பட்டனர்.

முதன் முதலில் பதிவு செய்யப்பட்ட நோயாளியை பற்றி மேலும் கூறும்போது, இந்த முதல் எண்ணிக்கை ஏப்ரல் 2 ஆம் தேதி முற்பகுதியில் பதிவு செய்யப்பட்டது. மேலும் தொழிலாளர்கள் சார்பாக பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவர் பேசும்போது, “நாங்கள் மிகவும் பயந்திருந்தோம்” என்றார். ஆனால், அதற்காக அவர்கள் வேலையிலிருந்து வீட்டிலேயே இருக்க முடியாது என்பது உணர்ந்தனர். ஏப்ரல் மாதம், முதல் நோயாளி பதிவு செய்யப்பட்ட உடன், தகவல்தொடர்பு நெறிமுறைகள் மற்றும் நிறுவனங்களின் செய்தி அறிக்கைகள் போன்றவற்றிம் முக்கியத்துவம் உணரப்பட்டதாக ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தொற்று நோய்களின் பேராசிரியர் பீட்டர் கொலிக்னான் கூறுகிறார். “நீங்கள் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் துணை ஒப்பந்தக்காரர்களைக் கொண்டிருக்கும்போது, வணிகங்கள் மீண்டும் திறக்கப்படுவதால் இது ஒரு பிரச்சினையாக இருக்கும். மேலும் கைவினைஞர்களில் மட்டுமல்ல, தொழிலாளர் நியமனம் மற்றும் வாடகை நிறுவனங்கள் வழியாக மருத்துவமனைகளில் பணிபுரியும் கிளீனர்களுக்கும் கூட.” என்றார்.

“கடந்த காலத்தில் நிகழ்ந்ததை விட தகவல்தொடர்பு பிணைப்புகள் சிறப்பாக இருக்க வேண்டும்” என்று கொலிக்னான் கருதுகிறார், மேலும் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு உறுதிப்படுத்தப்பட்ட நோயாளியை அறிவிப்பதற்கான ஒரு நெறிமுறையை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறார். எனவே “மாநில சுகாதார அதிகாரிகள், முதலாளிகள், ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் வாடகை நிறுவனங்கள் அனைத்தும் வளைந்து கொடுக்கின்றன’’ என்கிறார். “முதல் நோயறிதல் சோதனை முடிவுகள்  கிடைத்தவுடன் மிகவும் வெளிப்படையான செயல்முறைகளை பின்பற்ற வேண்டும்”. ஏனெனில், எதிர்காலத்தில் கூட்டமான பாதிப்புகள் “தவிர்க்க முடியாதவை” என்று கோலிக்னான் கூறுகிறார், ஆனால் கோவிட் -19 இன் இரண்டாவது சுற்று ஏற்படுவதால், அவை அதிக ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்று தொழிலாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால், வேலைக்கு செல்லாமல் இருந்து, வேலை பாதுகாப்பைப் பணயம் வைக்க அவர்களுக்கு விருப்பமில்லை. எனவே, கோவிட் -19 உறுதியானாலும் அல்லது அறிகுறிகள் இருந்தாலும் அவர்கள் வேலைக்கு செல்வதையே விரும்புகிறார்கள்” என்று கூறி விளக்குகிறார். பணியிடங்களைச் சுற்றி அதிக பாதிப்புகள் கண்டறியப்பட இதுவே காரணம் என்கிறார்.

வடமேற்கு டாஸ்மேனியா

ஏப்ரல் தொடக்கத்தில் வடமேற்கு டாஸ்மேனியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோயால்களின் எண்ணிக்கை அதிகரிப்பில் இருந்து, அதிகாரிகள் அறிந்துக் கொண்ட முக்கிய பாடம் தொழிலாளர் மனப்பான்மையாகும் என்றும் கொலிக்னன் கூறுகிறார். இது பர்னியில் இரண்டு மருத்துவமனைகள் மூடப்பட்டதையும், அத்தியாவசியமற்ற வணிகங்கள் தடைசெய்யப்பட்டதையும் செய்தது. மேலும், 1,000 க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 4,000 குடும்ப உறுப்பினர்கள் வரை தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இந்த பரவலுக்கான இடைக்கால அறிக்கை, ஆரம்ப கட்ட நோயாளிகள்,  நியூ மார்ச் பரவலுடன் இருந்த தொடர்புகளை விளக்கியது. இது தகவல் தொடர்பு மற்றும் தொடர்புத் தடமறிதலுக்கு உதவுவதற்காக ஊழியர்களின் பட்டியலை டிஜிட்டல் மயமாக்குதல், சிகிச்சை வசதிகளுக்கு இடையில் ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது பணியாற்றும் ஊழியர்களின் பின்னணியில் உள்ள அடிப்படை காரணங்கள் போன்றவற்றை விவாதிக்க பெருமளவில் உதவியது.

லேசான நோய்வாய்ப்பட்ட தொழிலாளர்கள் சக ஊழியர்களை ஆதரிப்பதற்காக வேலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைக்கக்கூடாது. குறிப்பாக ஒரு சுகாதாரம்  மற்றும் வயதானவர்கள் பராமரிப்பு மையங்களில் உள்ள ஊழியர்கள். “நாங்கள் ஆரம்ப கட்ட பரவலை கவனித்துக் கொண்டிருந்த வேளையில், மக்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது, நியூமார்ச் போன்ற நர்சிங் ஹோம்களின் ஊழியர்கள்  வேலைக்குச் சென்றுவிட்டார்கள். பணிபுரியும்போது கடைபிடிக்க வேண்டிய சமூக இடைவெளியையும் கடைபிடிக்கவில்லை. இங்கு அதிகரித்த தொற்று நோய் உண்மையில் தவிர்த்திருக்கப்பட வேண்டிய ஒன்று” என்றார்.

முழுமையான ஊரடங்கு துவங்குவதற்கு முன்பு, பணியிட அளவிலான பணிநிறுத்தம் இயல்பாக கடைபிடிக்கப்பட்டது. எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பரவல் என்ற முறையில் முழுமையான அடைப்புகள் தேவைப்பட்டிருக்கவில்லை. அனால், சரியான சமூக இடைவெளியை அனைவரும் பின்பற்றினால், முழுமையாக மூடுவதற்கு அவசியமும் நேராது” என்று கோலிக்னான் கூறுகிறார். “1.5 மீட்டர் இடைவெளி விதி கடைபிடிக்கப்படுவதை உறுதிசெய்யும் முதலாளிகளுக்கான நன்மை, அதாவது ஒரு தொழிலாளி கண்டறியப்பட்டால் அனைவருக்கும் தனிமைப்படுத்தப்பட வேண்டியிருக்கும். தவறினால், ஒரு பெரும் அளவிலான பரவலைத் தவிர்க்க முடியாது” என்று கூறி முடித்தார்.

தமிழில்: லயா