ஐபிஎல்2019: இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆடும் இடத்திலேயே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்! அஸ்வின்

சென்னை:

நாடாளுமன்ற தேர்தலில், இந்திய கிரிக்கெட் வீரர்கள், ஐபிஎல் போட்டி நடைபெறும் மாநிலத்தி லேயே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் பிரபல கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் அணியின் கேப்டனுமான  அஸ்வின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,  நாடாளுமன்ற பொதுத் தேர்தலும், ஏப். 11 முதல் மே 19 வரை மொத்தம் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.

அதே வேளையில்  ஐபிஎல் போட்டி காரணமாக இந்திய வீரர்களும், வெவ்வேறுஇடங்களுக்கு பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் வாக்களிப்பது கேள்விக்குறியதாகி உள்ளது.

ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் ஐபிஎல் போட்டிகளில் வெவ்வேறு பகுதிகளில் ஆடவுள்ளனர். எனவே தேர்தலின் போது அவர்கள் அங்கேயே வாக்களிக்க வகை செய்ய வேண்டும் என பிரதமருக்கு அஸ்வின். கோரிக்கை விடுத்துள்ளார்

வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதால், நாட்டின் மூலை முடுக்கில் உள்ள அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் எனவும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.