’நேர்கொண்டபார்வை’ படத்துக்கு பிறகு அஜீத் நடிக்கும் படம் ‘வலிமை’.
முந்தைய படத்தை இயக்கிய விநோத் இந்த படத்தையும் டைரக்ட் செய்கிறார். ஸ்ரீதேவி கணவர் போனிகபூரே ‘வலிமை’யையும் தயாரிக்கிறார்.
கடந்த டிசம்பர் மாதம் இதன் ‘ஷுட்டிங்’கை ஆரம்பித்த விநோத் , சென்னையிலும், ஐதராபாத்திலுமாக பெரும்பகுதி படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார்.


அண்மையில் சென்னையில் நடந்த ‘பைக் ரேஸ் ‘ படப்பிடிப்பில் பங்கேற்று சண்டை போட்ட அஜீத் காயம் அடைந்தார். இப்போது குணம் அடைந்துள்ளார்.
யாரும் இதுவரை படப்பிடிப்பு நடத்தாத ‘லொக்கேஷனில்’ ஷுட்டிங் நடத்த விரும்புகிறவர், விநோத்.
‘தீரன் அதிகாரம் ஒன்று’’ படத்தின் ஆக்‌ஷன் காட்சிக்கு அப்படி ஒரு இடத்தை ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்ந்தெடுத்து படமாக்கினார்.
இன்று வரை அந்த சண்டை காட்சி பேசப்படுகிறது.
வலிமை படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சிக்கும் அப்படி ஒரு லோகேஷனை, ஸ்பெயின் நாட்டில் கண்டு பிடித்துள்ளார், விநோத்.
கொரோனா பாதிப்புகள் ஓரளவு குறைந்ததும், அஜீத் உள்ளிட்ட படக்குழு, ஸ்பெயின் பறக்க உள்ளது.

-ஏழுமலை வெங்கடேசன்