சென்னை: நம் மாநிலத்தை இந்தியாவில் மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்ய தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுவோம், கடினமாக உழைப்போம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டிவிட்பதிவிட்டுள்ளார்.

சிறந்த முறையில் ஆட்சி செய்யும் மாநிலங்களின் பட்டியலை பொது விவகாரங்களுக்கான மையம் என்ற ஒரு ஆய்வு அமைப்பு ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைவராக இருக்கிறார். அவரது தலைமையிலான குழு  நடப்பாண்டுக்கான மாநிலங்களின் நிர்வாகம் குறித்த பட்டியலை வெளியிட்டு உள்ளது.
.அந்த பட்டியலில் சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் முதலிடம் கேரளாவுக்கு கிடைத்துள்ளது. 2வது இடத்தை  தமிழ்நாடு பெற்றுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு தமிழகம் முதலிடத்தில் இருந்ந்தது.
இது குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் வரவேற்பு தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.
அதில், தமிழ்நாடு  இந்தியாவின் சிறந்த நிர்வாக மாநிலங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது நமது அயராத முயற்சியின் விளைவாகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பின் விளைவாகும். நம்   இந்தியாவில் மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்ய தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுவோம், கடினமாக உழைப்போம் என்று தெரிவித்துள்ளார்.